Amazon

Wednesday, 1 February 2017

வறண்ட பூமியில் சந்தன மரம்

வறண்ட பூமியான சிவகங்கையில் சொட்டு நீர் பாசனம் மூலம் சந்தன மரங்களை வளர்த்து வருகிறார் நாட்டரசன்கோட்டை விவசாயி செல்வம்.
அவர் கூறியதாவது: நாட்டரசன்கோட்டை அருகே மாங்காட்டுப்பட்டியில் 10 ஏக்கரில் பரிட்சார்த்தமாக சந்தன மரம் நடும் முயற்சியில் இறங்கினேன். வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள மாவட்டமாக இருப்பதால்,தண்ணீரின்றி விவசாயம் செய்வது கடினம். இருப்பினும் சொட்டு நீர் பாசனம் மூலம் சந்தன மரங்களை வளர்த்து வருகிறேன். கடந்த 6 ஆண்டுக்கு முன் ஏக்கருக்கு 300 சந்தன மரக்கன்று வீதம் 3,000 கன்றுகளை நடவு செய்தேன். பெங்களூருவில் இருந்து ஒரு கன்று ரூ.150க்கு வாங்கினேன். 2 ஆண்டு நன்கு பராமரித்து, வளர்ந்த பின் முறையாக தண்ணீர் விட்டும், பூச்சி தாக்காமல் மருந்து தெளித்தால் போதும். 15 முதல் 20 ஆண்டு கழித்து வருவாய்துறை அனுமதியுடன் மரங்கள் வெட்டலாம்.
வளர்ந்த மரங்களில் 30 சதவீதத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். எஞ்சிய மரங்களை நாமே விற்கலாம். மலைப்பிரதேசங்களில் மட்டுமே வளரும் சந்தன மரங்களை வறண்ட சிவகங்கையில் வளர்க்கும் நோக்கில் வளர்க்கிறேன். சந்தன மரங்களை அரியானா, அருணாச்சல பிரதேசத்திற்கு அனுப்பி, அங்கு சந்தன தைலம் தயாரிப்பர். அன்றைய அரசு விலை நிர்ணயப்படி பல லட்சம் வருவாய் கிடைக்கும், என்றார்

ஏக்கருக்கு 4 லட்சம் வருமானம் தரும் கேந்தி மலர் சாகுபடி

“உழுதவன் கணக்கு பார்த்தால் தார் கம்பு கூட மிச்சமாகாது” என்பது கிராமப்புற விவசாயிகள் கூறுவதுண்டு. ஆனால் இவற்றை எல்லாம் பொய்யாக்கி ஏக்கருக்கு 4 லட்சம் வருமானம் எடுக்கிறேன் என்று கர்வத்துடன் கூறுகிறார் ஒரு சாதனை பெண் விவசாயி சிவகாமி விருமாண்டி.
எப்படி: இவர் வருடந்தோறும் கேந்திமலர் சாகுபடி செய்கிறார். ஈஸ்வெஸ்ட் நிறுவனத்தின் “”மேக்சிமா எல்லோ வீரிய ஒட்டு” என்ற ரகத்தை ஏக்கருக்கு 10 ஆயிரம் செடிகள் நான்கு உழவு முடிந்தவுடன் 2×2 அளவில் பார் அமைத்து நடவு செய்தார். செடி நட்ட 40 நாளில் முதல் அறுவடை வந்தது. பூ வந்த நாள் முதல் 100 நாட்கள் அறுவடை செய்யலாம். ஏக்கருக்கு 10 டன் பூ வந்தது. 1 கிலோ குறைந்த பட்ச விலை ரூ.40. அதிக பட்சம் ரூ.160. இந்த பூக்களுக்கு வருடத்தில் அனைத்து நாட்களிலும் நல்ல வரவேற்புள்ளது.
ஏக்கர் / 4,00,000. (10,000 x 50 = 5,00,000).
வருமானம் – ரூ.5,00,000. செலவு – 1,00,000. நிகர வருமானம் – ரூ.4,00,000.
செலவு: உழவு – 4000, நாற்று (ரூ) 30,000, மருந்து + உரம் – 16,000, கமிஷன் – 50,000, மொத்தம் 1,00,000. இவர்கள் பூப்பறிப்பதற்கு கூலி ஆட்கள் விடுவதில்லை.
இவருக்கு இவர் கணவர் விருமாண்டி D.Agri தொழில்நுட்ப விவரங்களை கற்றுத் தருகிறார். இவர் இந்த செண்டு பூ வீரிய நாற்றுகளை தமிழ்நாடு முழுவதும் வினியோகம் செய்கிறார்

‘மா’வைக் காக்க அற்புத இயற்கை வேளாண்மை வழிமுறைகள்

ஒவ்வொரு பகுதியிலும் இன்று இயற்கை வேளாண் முறைகள் கடைபிடிப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இயற்கை வேளாண்மை செய்து வரும் விவசாயிகள் தனது நிலத்திற்கு “அங்ககச் சான்று’ பெற முன்வர வேண்டும். இந்த உத்தி மூலம் ஏற்றுமதி செய்தும் லாபம் பெற வழி உள்ளது. குறிப்பாக “அல்போன்சர்’ ரகம் காதர் என்றும் குண்டு என்றும் பாதாமி என்றும் அழைக்கப்படும் இந்த ரகம் பிரசித்தி பெற்று நல்ல விலை தருவதால் தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத்துறை மூலம் அரசு பழப்பண்ணைகள் மூலம் உற்பத்தி செய்து வழங்கப்பட்டு வருகிறது.
இயற்கை வேளாண்மை எனும் செலவு குறைந்த உத்தி மூலம் நீண்டகால, நிரந்தர வரவுக்கு வழி உள்ளது. சுற்றுச்சூழல் பாதிக்காது. உடல் நலம் பேணவும், சந்ததியினருக்கு புதுப்புது நோய்கள் வராமல் தடுக்கவும் உதவுவதால் எல்லா இடத்திலும் எல்லாப் பயிருக்கும் பலவித உத்திகள் உள்ளதால் நல்ல மகசூல் மட்டுமல்ல. வரவையும் பல மடங்கு அதிகரிக்கலாம்.
இயற்கை வேளாண்மைக்கு உறுதுணையான பல இடுபொருட்களில் உயிர் உரங்கள், மண்புழு உரம், பஞ்சகவ்யா, தக கவ்யா, மண்புழுகுவியல்கள், சூடோமோனாஸ், டிரைக்கோடெர்மா விரிடி, அசோலா, பசுந்தழை உரங்கள், பசுந்தழை உரப்பயிர் பயன்பாடு, பயிர் கழிவுகள் உரமாக்குதல், மிருக கழிவுகள், கம்போஸ்ட் வகைகள் பயன்பாடு பலவித சாம்பல்கள், பலவித பிண்ணாக்கு மற்றும் இலைச்சாறுகள் உள்ளன. இவை தவிர விவசாயிகள் கடைபிடித்திட உதவும் உழவியல் உத்திகளாக பல பயிர் சாகுபடி ஊடுபயிர் சாகுபடி, நிலப்போர்வை உதவும். பசுந்தாள் உரப் பயிர்களான சீமை அகத்தி, சணப்பை தக்கைப்பூண்டு, பில்லிப்பயறு கொளுஞ்சி, அவுரி முதலியவற்றை பயிர் சுழற்சியில் சேர்த்தல் நல்லது.
பசுந்தழைச் செடிகள் கிளைரிசிடியா, ஆவாரை, ஆடாதோடா, எருக்கு மற்றும் மலைப்பூவரசு , பூவரசு மற்றும் புங்கம் மரங்களையும் பயன்படுத்தலாம். தமது தோட்டத்திற்கு தேவையான மண்புழு உரத்தினை அங்கே வளர்க்கப்படும் மிருகங்களான ஆடு, மாடு, குதிரை மற்றும் செம்மறி ஆடு முதலியவற்றில் கழிவுகளைப் பயன்படுத்தியும் தயாரிக்கலாம். அங்கே கிடைக்கும் கழிவுகளை மீள் சுழற்சி செய்து பயன்படுத்துவது அற்புத செலவில்லா உத்தியாகும். எந்தப் பயிர் சாகுபடி செய்தாலும் பலவித எளிய உத்திகளுடன் ஏற்ற ஊடுபயிர் மற்றும் இணைபயிர் தேர்வு செய்தால் கூடுதல் வரவும் உண்டு. தேனீ வளர்ப்பு மற்றும் மீன் வளர்ப்பும், இதர பறவைகளான கோழி, வாத்து, காடை, வான்கோழி வளர்ப்பதும் வாய்ப்புள்ள தருணம் மேற்கொள்ளலாம்.
பாரம்பரிய உத்திகளில் விதை நேர்த்திக்கு புகையிலைச்சாறு பயன்பாடு, சாணிப்பால் பயன்பாடு செம்மண் கலந்து விதைகளை முலாம் பூசுதல் உரிய பருவம் விதைப்பது, பறவை இருக்கையாக பழைய பானைகள் பயன்பாடு, பொறிப்பயிராக ஆமணக்கு, பொரியல் தட்டை சாகுபடி முதலியன நெடுநாள் முதலாக வழக்கில் உள்ளதால் தேவைப்படும் பகுதிகளில் பயன்படும். மா சாகுபடியில் மேற்கூறியுள்ள உத்திகளில் பலவற்றைக் கடைப்பிடித்தால் உயர் லாபம் பெறலாம்.

இயற்கை முறை நாவல் சாகுபடி

கொடைரோடு மெட்டூரை சேர்ந்த விவசாயி சி.ஐ.ஜெயக்குமார் ஒரு ஏக்கருக்கு நாவல்பழ சாகுபடி செய்தார். 96 மரங்கள் உள்ளன. சாதாரணமாக நாவல் மரங்கள் 30 முதல் 35 அடி வரை வளரும். அவர் ஆண்டுதோறும் கவாத்து செய்வதால் 15 அடி உயரமுள்ள செடிகளாக வளர்ந்துள்ளன. இயற்கை முறையில் உரமிடுகிறார். அசோஸ்பைரில்லம், ரைசோபியம், சூடோமோனாஸ், மாட்டு எலும்பு சாம்பல், பஞ்சகாவ்யம் போன்ற இயற்கை நுண்ணூட்ட சத்துகளை பயன்படுத்துகிறார். நோய் தாக்குதலை தவிர்க்க இஞ்சிச்சாறு, மஞ்சள் பொடியை பயன்படுத்துகிறார்.
நான்கு ஆண்டுகளில் இருந்து பழம் காய்க்கின்றன. ஒரு மரத்தில் 60 கிலோ வீதம் ஏக்கருக்கு 5.5 டன் கிடைக்கிறது. சாதாரணமாக ஒரு ஏக்கரில் 2 டன் மட்டுமே மகசூல் கிடைக்கும். பழம் 5 கிராம் மட்டுமே இருக்கும். பறிக்கும்போதே பாதி பழங்கள் சேதமாகிவிடும். இங்கு ஒரு பழம் 17 முதல் 20 கிராம் இருக்கிறது. உயரம் குறைவாக இருப்பதால் பழங்களை சேதமின்றி பறிக்கின்றனர்.
விவசாயி கூறியதாவது: ராஜமுந்திரியில் “ஜம்பு’ ரக நாவலை வாங்கி வந்து பயிரிட்டேன். ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே செலவானது. ஒவ்வொரு மரமும் 22க்கு 22 அடி இடைவெளி உள்ளது. அதிக தண்ணீர் தேவையில்லை. 15 நாட்களுக்கு ஒருமுறை பாய்ச்சுவேன். மே முதல் ஜூலை வரை பழங்களை பறிக்கிறோம்.
நாவல் மரத்தை பொறுத்தவரை ஒரு ஆண்டு நல்ல விளைச்சலும், அடுத்து ஆண்டு அதில் பாதி மட்டுமே கிடைக்கும். ஒரு கிலோ ரூ.150 க்கு விற்கிறோம். சென்னை பசுமை அங்காடிகளுக்கு அனுப்புகிறேன். எங்கள் பண்ணையில் “நாவல் ஜூஸ்’ தயாரிக்கிறோம். 700 மி.லி., ஜூஸ் பாட்டிலை ரூ.170 க்கு விற்கிறோம். ஆண்டிற்கு குறைந்தது ரூ.5 லட்சம் வரை லாபம் கிடைக்கும், என்றார்.

இயற்கை முறை கத்தரி சாகுபடி

இயற்கை மற்றும் உயிர் ரக மருந்துகளைப் பயன்படுத்தி கத்தரி சாகுபடியில் விவசாயிகள் அதிக லாபம் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய பூச்சியியல் வல்லுநர் என்.விஜயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.
உடல் நலனை பாதிக்காத, சுகாதாரமான சமுதாயத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கு விவசாயிகளுக்கு இருக்கிறது. விஷத்தன்மையற்ற விளை பொருள்களை விளைவிப்பதன் மூலம், நோயற்ற சமுதாயத்தை உருவாக்க முடியும். பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவதால் அவை விஷமாகி, பல்வேறு விதமான நோய்களை உண்டாக்கக் கூடிய சூழல் இப்போது நிலவுகிறது.
விஷத்தன்மை கொண்ட பூச்சிக் கொல்லிகளைப் புறக்கணித்து, இயற்கை மற்றும் உயிர்ரக மருந்துகளைப் பயன்படுத்துவதன் மூலம், கத்தரி, விஷத்தன்மை சேர்வதைத் தடுக்கலாம்.
கத்தரியில் தண்டு மற்றும் காய் துளைப்பான், இலை பேன், மாவுப்பூச்சி, எபிலாக்னான் பொறி வண்டு ஆகியவை தாக்கும்.
தண்டு துளைப்பானைக் கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கை, கத்தரி செடியின் வேர்ப்பகுதியில் வைத்து, மண் அணைப்பு செய்தல் அவசியம்.
காய் துளைப்பானைக் கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு ஒரு விளக்கு பொறி வைக்க வேண்டும். இதில் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே விளக்கு எரிக்க வேண்டும். இதனால் தாய்ப் பூச்சிகள் விளக்கொளியால் கவரப்பட்டு, விளக்கில் சிக்கி இறக்கும். விளக்குப் பொறி ஒன்றின் விலை ரூ.100. மேலும், இனக் கவர்ச்சி பொறியை ஒரு ஏக்கருக்கு 5 வீதம் வைக்க வேண்டும். இதன் விலை ரூ.125.
முட்டை பருவத்தை அழிக்க, டிரைக்கோகிராமா கைலோனிஸ் எனும் ஒட்டுண்ணிகளை ஒரு ஏக்கருக்கு 2 சிசி எனும் அளவுக்கு பயன்படுத்த வேண்டும். இதில் ஒரு சிசி ஒட்டுண்ணி விலை ரூ.20.
பூ பூக்கும் பருவத்தில் ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மில்லி லிட்டர் வேப்ப எண்ணெய் கலந்து தெளிக்க வேண்டும். கத்தரிக்கு உள்ளே புழு தாக்கினால், பெவேரியா பேசியானா எனும் உயிர்ரக பூஞ்சாண மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 4 கிராம் வீதம் கலந்து, அதிகாலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.
விசைத் தெளிப்பானாக இருந்தால் ஒரு ஏக்கருக்கு 100 லிட்டர் தண்ணீரும், கைத்தெளிப்பானாக இருந்தால் ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரும் பயன்படுத்த வேண்டும். இலைப்பேன் தாக்கினால், 4 நாள்கள் புளித்த 2 லிட்டர் மோரில் 10 லிட்டர் தண்ணீர் கலந்து தெளித்தால் இலைப்பேன் கொட்டிவிடும். இதன் பயனாக, செடியில் பல புதிய துளிர்களும் வரும்.
மாவுப்பூச்சி தாக்குதலைத் தடுக்க ஒரு லிட்டர் தண்ணீரில் 40 மில்லி மீன் எண்ணெய் கலந்து தெளிக்க வேண்டும்.தாக்குதல் மிக அதிகமாக இருந்தால், வெர்டிசிலியம் லீகானி எனும் உயிர்ரக பூஞ்சாணத்தை ஒரு லிட்டர் நீரில் 4 கிராம் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
எபிலாக்னான் பொறி வண்டு, இலையில் துளை போடும். அப்போது ஒரு ஏக்கருக்கு 12 கிலோ சாம்பலை ஆற்று மணலுடன் கலந்து, இலை மீது அதிகாலையில் தூவ வேண்டும். கரி, நிலக்கரி, அரிசி உமி என எந்த சாம்பாலாக வேண்டுமானாலும் இருக்கலாம். சாம்பலில் உள்ள சிலிக்கானை சாப்பிடுவதால், வண்டின் பல் உடைந்து, அவை இறந்து போகும்

உளுந்து மகசூலை உயர்த்திப் பார்க்கும் உரக்குழி

திரு.கணேசன், தஞ்சாவூர் மாவட்டம், சோழகன்கரை சிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி ஏக்கருக்கு 9 குவிண்டால் உளுந்து மகசூலை உயர்த்திப் பார்க்கும் உரக்குழி பற்றி கூறுகிறவதாவது. 100 அடி நீளம், 9 அடி அகலம், 3 அடி ஆழம் கொண்ட குழியெடுத்து, மாட்டுக் கொட்டகையிலிருந்து வரும் கழிவுநீர்க் குழாயை அந்தக் குழியில் அணைத்திருக்கிறார். அந்தக் குழியின் கரைகளில் கொட்டாரப் பந்தல் அமைத்து,  அதில் அவரை, புடலை போன்ற கொடிகளை நிழலுக்காகப் படரச் செய்துள்ளார். இந்தக் கொடிகள் உதிர்க்கும் இலை, தழைகள் குழியில் விழுந்து கொண்டே இருக்கின்றன. இதோடு, துளசி ஆடுதொடா இலை, வேம்பு உள்ளிட்ட இலை, தழைகளையும் இதில் கொட்டுகிறார். சாணம், மூத்திரம் எல்லாம் ஒன்றாகக் கலந்து, உரக்குழியாக மாறியிருக்கிறது. பயிர்களுக்கான தண்ணீரை.
“ஒன்றரை ஏக்கர்ல உளுந்து விதைச்சுருக்கேன். மொத்தத்துக்கும் உரக்குழி தண்ணிதான் பாசனமாயிட்டிருக்கு. இந்த உளுந்துச் செடியில இலைகள் அடர்த்தியாகவும், அகலமாகவும் இருக்குறதுனால களைகளே இல்ல. ஒரு செடிக்கு சராசரியா 20 கிளைகளும், மொத்தம் 150 முதல் 200 காய்களும் பிடிச்சிருக்கு. விதைச்சு 50 நாட்களுக்கு மேல ஆகுது. இதுவரைக்கும் பூச்சி, நோய்த் தாக்குதல் கொஞ்சம்கூட இல்ல.
இதுவே ரசாயன முறையில உளுந்து சாகுபடி செஞ்சப்ப, 25ம் நாள் அசுவணித் தாக்குதல், 35-ம் நாள் மஞ்சள் நோய் தாக்குதல், இலைச் சுருட்டுப் புழுத் தாக்குதல், 40-50 நாட்கள்ல காய்ப்புழுத் தாக்குதல்னு தொடர்ச்சியா பூச்சிமருந்து அடிச்சுக்கிட்டே இருப்போம். விதைச்ச 25-ம் நாள், ஒரு ஏக்கருக்கு ஒண்ணரை மூட்டை டி.ஏ.பி. போடுவோம். 35-ம் நாள் மற்றும் 60-ம் நாள் தலா ரெண்டு லிட்டர் டி.ஏ.பி. கரைசல் தெளிப்போம். ஆனாலும், விளைச்சல் சுமாராதான் இருக்கும் . ஒரு செடிக்கு அதிகபட்சம் 100 காய்கள்தான் இருக்கும். அதிலும்கூட 15 பொக்கையா இருக்கும். அதிகபட்சம் ஏக்கருக்கு 6 குவிண்டால் கிடைச்சதுதான் பெரிய மகசூல்.
இயற்கை உரக்குழி வழியா தண்ணி பாய்ச்சி, உளுந்து சாகுபடி செய்யத் தொடங்கினேன். இதுல, ஒரு தடவை மட்டும்தான் களையெடுக்கற செலவு. அடுத்தது அறுவடைதான் (ரசாயன முறையில் இரண்டு தடவை களை எடுக்க வேண்டும்). உரக்குழி மூலமா போன வருஷம் சாகுபடி செஞ்சப்ப, ஒரு செடிக்கு 140-170 காய்கள் இருந்துச்சு. ஏக்கருக்கு 10 குவிண்டால் வரை மகசூல் கிடைச்சுது. இந்த வருஷம் அதைவிட அதிகமாக கிடைக்கும்னு தோணுது. ஒரு செடிக்கு 200 காய்கள் வரைக்கும் இருக்குறதுனால கண்டிப்பா 12 குவிண்டால் மகசூல் கிடைக்கும்னு எதிர்பார்க்குறேன். இது ரசாயனத்துல விளைஞ்சது பசுமையே இல்லாம காய்ஞ்சு கிடக்கு. இலைகள் அடர்த்தியா இல்லாம, அதிகமாக களை  மண்டிக் கிடக்கு. மஞ்சள் நோய் தாக்குதல், இலைச்சுருட்டுப்புழுத் தாக்குதலும் அதிகமா இருக்கு. என் வயல்ல ஆடுதுறை 5 ரக உளுந்தை ஏக்கருக்கு 12 கிலோ விதைச்சேன். என் வயல்ல இருக்கற, அதே மண்கண்டம்தான் (செம்மண், மணல் கலந்த மண்) இங்கயும் இருக்கு.

இயற்கை முறையில் தழைச்சத்து தயாரிக்கும் முறை

தழைச்சத்து என்பது மனிதர்களுக்கு புரதச்சத்து போன்றது. பயிரின் வளர்ச்சிக்கு தழைச்சத்து மிக முக்கியமானது. செயற்கை உரத்தில் யூரியா தழைச்சதிற்கு பயன்படுத்தபடுகிறது. இபொழுது இயற்கை முறையில் எப்படி தழைச்சத்து நிறைந்த உரம் தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்.
ஒரு பாத்திரத்தில் 5 கிலோ சாணம், 3 லிட்டர் மாட்டுச் சிறுநீர், அரை
கிலோ வெல்லம் ஆகிய மூன்றையும் ஒன்றாகக் கலந்து மூடிவைத்து, நொதிக்கவிட
வேண்டும். இன்னொரு பாத்திரத்தில், நன்கு கனிந்த 15 வாழைப்பழம், கால் கிலோ
வெல்லத்தை ஒன்றாகக் கலந்து நொதிக்கவிட வேண்டும். இரண்டு நாட்கள் கழித்து,
இந்த இரண்டு கலவைகளையும் ஒன்றாக்கி, ஓரிரு நாட்களுக்கு நொதிக்க வைக்க
வேண்டும். இதனுடன் தலா ஒரு கிலோ ரைசோபியம், அசோஸ்பைரில்லம்,
பாஸ்போ-பாக்டீரியா, சூடோமோனஸ் (இந்த உயிர் உரங்களின் விலை மிகவும்
குறைவு. அருகில் உள்ளா வேளாண் விரிவாக்க மையங்களில் கிடைக்கும்)
ஆகியவற்றையும் கலந்து, ஒரு நாள் இரவு நொதிக்கவிட வேண்டும்.
இந்தக் கரைசல், தோசை மாவு பதத்துக்கு மாறி இருக்கும். இதோடு இரண்டு கிலோ
கடலைப் பிண்ணாக்கு கலந்து சில மணிநேரம் வைத்திருந்தால், ஈரப்பதம்
உறிஞ்சப்பட்டு, புட்டுப் பதத்துக்கு மாறிவிடும். இதை, ஒரு ஏக்கர் நெல்
வயலில் பரவலாகத் தெளிக்க வேண்டும். அடுத்த சில நாட்களில் மண்ணில்
நுண்ணுயிரிகள் பெருகி, பயிர் பச்சை பிடித்து ஆரோக்கியமாக வளரத் தொடங்கி
விடும்.
இந்த இடுபொருளை, ‘மேம்படுத்தப்பட்ட அமுதக்கரைசல்’ என அழைக்கிறோம்.
இதற்குப் பதிலாக, இன்னும் எளிய முறையில் அக்கம்பக்கத்தில் கிடைக்கக்கூடிய
இலைதழைகளைக் கொண்டேகூட இடுபொருள் தயாரித்து, இலைவழி தெளிப் பாகவும்
ஊட்டச்சத்து கொடுக்கலாம். இது பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும், பூச்சி
விரட்டியாகவும் பயன்படும்.
இதைத் தயாரிக்க, தலா 5 கிலோ வேம்பு, புங்கன், நொச்சி, நெய்வேலி
கட்டாமணக்கு, ஆடாதொடை இலைகளை ஒன்றாகக் கலந்து, அவை மூழ்கும் அளவுக்கு
தண்ணீர் ஊற்றி சுண்டக் காய்ச்ச வேண்டும். பிறகு, ஆறவைத்து வடிகட்டி
மூன்று லிட்டர் பசுமாட்டுச் சிறுநீர் கலக்கவேண்டும். இக்கரைசலில் இருந்து
இரண்டு லிட்டர் எடுத்து, 26 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு ஏக்கருக்குத்
தெளிக்கலாம்.

பருத்தியில் இயற்கை வேளாண்மை

பருத்தி இந்தியாவின் மிகவும் முக்கியமான இழைப்பயிர் ஆகும்.இது வேளாண்மை மற்றும் தொழில்துறை பொருளாதாரத்தில் தவிர்க்க முடியாத பங்கினை வகிக்கிறது இது ஜவுளி தொழில்துறையின் முதுகெலும்பாக உள்ளது. கணக்கீட்டின் படி 70% நுகர்வு ஜவுளி துறையிலும் 30 சதவீதம் நாட்டின் ஏற்றுமதியிலும் உள்ளது. இதன் வர்த்தகம் ரூ.42,000 கோடிகளாகும்.இந்தியாவின் பருத்தி விவசாயம் 8.9 மில்லியன் ஹெக்டரில் நடைபெறுகிறது. இது உலகளவில் அதிகமான பரப்பளவாகும்.மேலும் இது உலக பரப்பளவில் 25% மற்றும் ஏழு மில்லியன் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குகிறது.
அங்கக பருத்தி வேளாண்மையின் நன்மைகள்
அ)சுற்று சூழலுக்கு இணக்கமான தொழில்நுட்பம்
  • மரபு வழி வேளாண்மையில் அதிகப்படியான இரசாயன உரம் மற்றும் பூச்சி கொல்லிகளை பயன்படுத்துவதினால் வேளாண் சுற்று சூழலின் அனைத்து அங்கங்களும் மாசு அடைகிறது.அங்கக பருத்தி உற்பத்தியில் அனைத்து இடுபொருட்களும் இரசாயனம் சாராத பொருட்கள்.மேலும் இவை சுற்றுப்புற சீர்கேடுகளின் பாதிப்புகளை குறைக்கிறது.
  • நூல்இழைகளில் பூச்சி மருந்துகள் படிந்திருப்பதினால் உபயோகிப்பாளர்களுக்கு பக்க விளைவுகளை உண்டாக்கும்.இயற்க்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் அங்கக வேளாண்மையில் இயற்கையான நோய் கட்டுப்பாட்டு முறைகளை கையாளுவதாலும் இத்தகைய விளைவுகளை ஏற்படுத்துவது இல்லை.
  • ஜவுளி தொழிற்சாலைகள் மற்றும் சாயப் பட்டறைகளினால் அதிக அளவில் வெளியிடப்படும் சுத்திகரிக்காத மற்றும் மறு சுழற்சி செய்யப்படாத கழிவுநீர் மனிதர்களுக்கு உடல்நல குறைவை ஏற்படுத்துவது மட்டுமல்லாது, கால்நடைகள் மற்றும் ஆறுகள்,கால்வாய்களிலுள்ள மீன்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.இருப்பினும் இத்தகைய மாசுபட்ட நீரை பருத்தி பயிர்களின் பாசனத்திற்க்கு உபயோகப்படுத்துவதினால் மகசூல் இழப்பினையும் ஏற்படுத்துகிறது.
  • மண்ணில் உள்ள நன்மை செய்யும் உயிர்களை பாதிப்பதினால் மண் வளம் பாதிக்கப்படுவதுடன், பருத்தியில் நோய்களை கட்டுப்படுத்தும் இயற்க்கையான ஒட்டுண்ணிகள் மற்றும் பறவையினங்களின் எண்ணிக்கையை குறைத்து சமநிலையை பாதிக்கிறது. அங்கக வேளாண் சுற்றுப்புற சூழல்களின் பல்வேறு அங்கங்களை பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவதின் மூலம் இயற்கை சமநிலைக்கு உதவுகிறது.
ஆ) உற்பத்தி செலவுகளை குறைக்கிறது
நவீன உற்பத்தி தொழில்நுட்பங்கள் பருத்தி உற்பத்தியில் செலவு – ஆதாய விகிதத்தை குறைக்கிறது.ஆந்திரா, பஞ்சாப், மகாராஷ்டிரா,போன்ற மாநிலங்களின் விவசாயிகள் மிக அதிகப்படியான உற்பத்தி செலவுகளால் பருத்தி விவசாயத்தில் குறைந்தபட்ச லாபத்தினைக் கூட பெற முடியாத காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்கள்.மற்றொருபுறம் அங்கக வேளாண்மை கிராமப்புற வேலை வாய்ப்புகளை அதிகரிக்கிறது மேலும் பண்ணை உள்ள வளங்களை பயன்படுத்துவதினால் இது செலவுகளை மேலும் குறைக்கிறது.
இ) பூச்சிக்கொல்லி எதிர்ப்புத்திறன் மேலாண்மை
பருத்தியில் நோய்களை தடுப்பதற்காக தொடர்ச்சியாக தீங்கு விளவிக்கும் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதினால் பூச்சிகள் அதிக எதிர்ப்ப திறன் பெற்று விடுவதினால் தொடர்ந்து அதிக முறை பூச்சி மருந்துகளை பயன்படுத்த வேண்டியுள்ளது இவைகள் உற்பத்தி செலவுகளை அதிகப்படுத்துகிறது.அங்கக வேளாண்மை இந்த முறைக்கு எதிர் மாறானது.பருத்தியில் அங்கக வேளாண்மை முறையினை பின்பற்றுவதற்காக ஏராளமான பூச்சி கட்டுப்பாட்டு முறைகள் ஆதாரமாக உள்ளது.
பருத்தியில் அங்கக வேளாண்மைக்கான அனுகுமுறையில் இராசயன மருந்துகள் இல்லத ஒரு முறையான அங்கக வேளாண்மை பருத்தி உற்பத்தியில் முதன்மையான இடம் பெறுகிறது.இந்த விவசாய முறையில் கவனத்துடன் மூலக்கூறுகள் அங்குள்ள வளங்கள்,வேளாண் சூழ்நிலை சிறப்பியல்பகள் மற்றும் சமூக பொருளாதார கட்டமைப்பு போன்ற தகவல்களை கொண்டு பொருத்தமான முறைகள் உருவாக்கப்படுகின்றன. அவை கீழ்க்கண்டவாறு.
1.இடத் தேர்வு
அங்கக வேளாண்மைக்கு கடுமையான மண்ணரிப்பினால் பாதிக்கப்பட்ட இடங்களும்,வருடம் முழுவதும் களைகள் நிறைந்துள்ள நிலங்களும் பயனளிக்காது.அங்கக வேளாண்மை என்பது நடைமுறையில் உள்ள சாகுபடி முறைகளை புறக்கணிப்பதோ அல்லத மாறுபட்டதோ அல்ல,எனவே வளம் குறைந்த மண்ணை நன்கு வளப்படுத்திய பிறகே அங்கக வேளாண்மையை கடைபிடிக்க முடியும்.
2. ரகத்தை தேர்வ செய்தல்
அதிக உற்பத்தி திறன் கொண்ட ரகங்கள் இராசயன உரஙக்களக்கே அதிக விளைச்சலை தரக்கூடியது அங்கக வேளாண்மைக்கு உகந்தது அல்ல,பாரம்பரியமான மற்றம் அங்கக வேளாண்மைக்க பொருத்தமான ரகங்களை தேர்வு செய்யவும்.நோய் எதிர்ப்புதிறன் மிக்க ரகங்கள் மிகவும் பொருத்தமான ஒன்றாகும். குறைவான வயதுடை ரகங்கள் ஓரளவிற்கு ஏற்புடையது மேலும் காய்புழு தாக்குதலும் பாதிப்பும் குறைவும்.
3. நடவு மற்றும் விதை அளவு
அமிலத்தில் நனைக்கப்பட்ட விதைகளை சர்வதேச விதிமுறைகளின்படி (1 FOAM) பயன்படுத்த கூடாது.அங்கக சாகுபடியில் உற்பத்தியில் செய்யப்பட்ட இழைக்காக சான்றிதழ் பெறமுடியாது.இருப்பினும் அங்கக வேளாண்மையின் மூலம் சாகுபடி செலவுகளை குறைத்து இலாபத்தை அதிகரிக்க விவசாயிகள் அமில நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை உபயோகித்து விதையின் மூலமாக பரவக்கூடிய நோய்களை தவிர்த்து தரமான பயிர் வளர்ச்சியை பெறமுடியும்,விதை நேர்த்தி செய்யப்பட்டாத விதைகளை பயன்படுத்தும் பொழுது சரியான பயிர் எண்ணிக்கையை பெற முடியும்,விதை நேர்த்தி செய்யப்படாத விதைகளை பயன்படுத்தும் பொழுது சரியான  பயிர் எண்ணிக்கையை பெற அதிக அளவிலான விதைகளை பயன்படுத்த வேண்டியிரக்கும் ஒரு ஹெக்டரில் 75×15 செ.மீ இடைவெளியில் 25 கிலோ விதைகளை பயன்படுத்தும் பொழுது 85 லிருந்து 90 ஆயிரம் செடிகளை ஒரு ஹெக்டரில் பெற முடியும். இரண்டு வரிசை பருத்தி செடிகளின் நடுவே ஒரு வரிசை தீவனதட்டை பயிரினை நடவு செய்ய வேண்டும். இது பருத்தி செடி பூப்பதற்கு முன்பாக செய்யப்பட வேண்டும்.
4) உரமிடுதல்
சரியான உற்பத்தியை பெற, மண்வளத்தை பராமரிப்பதும் படிப்படியாக உயர்த்துவதும் அவசியம். பருத்தியில் அங்கக சாகுபடிக்கு மண்ணின் அங்கக சத்துக்களை மேம்படுத்துதல் மற்றும் பராமரித்தல் மிகவும் முக்கியமானது. இவைகள் மண்ணின் பெளதிக தன்மையை அதிகிரிக்கிறது, மண்ணின் கட்டமைப்புகளை மேம்படுத்துகிறது மேலும் சத்துக்களை அளிப்பதையும் மேம்படுத்துகிறது. இதற்கு அதிக அளிவலான தொழுவுரங்களை இடுவதன் மூலம் பருத்தி பயிருக்கு தேவையான சத்துக்களை கிடைக்கச் செய்யலாம். பொதுவாக தொழுவுரங்களை இல்லாத பொழுது பல்வேறு வகையான உயிர் உரக் கலவைகளை உபயோகிக்கலாம். இயற்கை உரங்களான (தொழுஉரம், கலப்புஉரம், மண்புழுஉரம்) பசுந்தாள் உரங்கள், தானிய பயிர்கள் மற்றம் உயிர் உரங்கள் உடன் மண்வளத்தை திரும்ப பெற ஏதுவான பயிர் சுழற்சி முறைகள் ஆகியன மண்வளத்தை பராமரிக்கும் அங்கங்களாகும்.
அ) தொழுவுரம்
தொழுவுரம் 15 டன் /ஹெக்டர் என்ற அளவில் நடவுக்கு முன்னர் நிலத்தில் இட்டு நன்கு கிளரி விட வேண்டம். தொழுவுரம் நன்கு மக்கியதாக இருக்க வேண்டும். மேலும் உயிர் உரமான டிரைகோடர்மா விரிடியுடன் கலந்து இருப்பது சிறப்பு. வருடங்களில் மண்வளம் மேம்படுத்தப்பட்டவுடன் இந்த அளவை 5-10 டன்/ஹெக்டருக்கு  என்ற அளவில் படிப்படியாக குறைக்கலாம்.
ஆ) தீவனதட்டைப்பயிர்
நடவு செய்த 40 நாட்களுக்கு பிறகு பசுந்தாள் பயிர்களுடன் தீவன தட்டைபயிரை நடவு செய்ய வேண்டும்.இது பயிர் வளர்ச்சி பருவத்தின் பொழுதும்,பயிர் பூக்கும் தருணத்திலும் பருத்தி பயிருக்கு தேவையான தழைச்சத்துக்கள் கிடைப்பதை உறுதி செய்கிறது.இது மண்ணில் நுண்ணுயிர் பெருக்கத்தையும் துரிதப்படுத்துகிறது.கறைசலைக் கட்டுப்படுத்தி இயற்கை நோய் கட்டுப்பாட்டு அமைப்பினை மேம்படுத்துகிறது. சாகுபடியின் மூலம் 400-500 கிலோ/ஹெக்டர் காய்ந்த சருகுகளுடன் 2.5% தலைச்சத்து மற்றும் 10-12 கிலோ/ஹெக்டர் தலைச்சத்துக்களை கொடுக்கிறது. இதன் மூலம் கூடுதல் நன்மைகளாக களைக் கட்டுப்பாடு,மண் அரிப்பினை தடுத்தல்,மற்றும் பருத்தியின் நோய்களுக்கு இயற்கையான பாதுகாப்பினை ஏற்படுத்துதல் ஆகியன பெறப்படுகிறது.
இ) தக்கை பூண்டு
தக்கை பூண்டு பார்வை பருத்தி தோட்டத்தை சுற்றிலும் இரண்டு மீட்டர் அகலத்தில் வளர்ந்து நட்ட 65-70 நாட்களில் அறுவடை செய்து பருத்தி செடியின் வரிசைகளுக்கு இடையே பரப்பும் பொழுது இது பயிர் தண்டு வளர்ச்சிக்கு தேவையான தலைச் சத்தினை அளிக்கிறது.மேலும் தண்டுகள் விரைவில் மக்க கூடியவை.மேலும் மண்ணின் ஈரப்பதம் அழிவதையும் தடுக்கிறது.
ஈ) மண்புழு உரம்
தொழுவுரத்துக்கு மாற்றாக மண்புழு உரத்தினை 1.2 டன் /ஹெக்டர் என்ற அளவில் நடவு வரிசைகளின் போட்டு நடவு செய்ய வேண்டும். மண்புழு உரம் பல்வேறு நுண்ணூட்டங்களுக்கு அடித்தளமானது. மேலும் இது பயிர் வளர்ச்சிக்கு தேவையான மைக்ரோ புளோரா என்னும் அமிலத்தைக் கொண்டுள்ளது. மேலும் இது மண்ணின் கழிவுகளை மறுசுழற்சி செய்யவும் ஏதுவாக அமைகிறது.
உ) உயிர் உரங்கள்
நடவின் பொழுது விதைகளை அசிட்டோ பாக்டர் அல்லது அசோஸ்பியரில்லம் 200 கிராம் / ஏக்கர் என்ற அளவில் கலந்து விதைக்க பரிந்துரைக்கப்படுகிறது.
5) கலப்பு உரத்திற்கான தொழில்நுட்பங்கள்
1. மண்புழு உரம்
சுயசார்புடைய பசுந்தாள் உரங்கள் மற்றும் தொழுவுரம்  ஆகிய மண்ணின் அங்ககத் தன்மையை அதிகரிக்கும் காரணிகளாகும்.இருப்பினும் சி சூழ்நிலைகளுகடகு இவைகளால் தேவையை முழுவதுமாக பூர்த்தி செய்ய முடிவதில்லை.ஏராளமாந மண்ணின் கழிவுகள் மற்றும் தாவர பொருட்கள் வெருமனே எரிக்கப்படுகின்றன. இதற்காக  பண்ணைக் கழிவுகள் மற்றும் தாவர பொருட்களை மறுசுழற்சி செய்வதன் மூலம் உபயோகப்படுத்த முடியும். நவீன கருத்துக்களின் அடிப்படையில் மண்புழுக்கள் மற்றும் பூஞ்சானங்கள் இந்த சுழற்சிக்கு பயன்படுகின்றன.இந்திய மண்புழு இனத்தை சேர்ந்த எசேனியா புடிடா என்ற இனம் பண்ணைக்கழிவுகளை ஒருமாத காலத்தில் மண்புழு உரமாக மாற்றிவிடுகிறது. மேலும் பாலிதீன் தவிர மற்றவைகளை மக்கச் செய்துவிடுகிறது.
மண்புழு உரம் தயாரிக்க 15-25 செமீ உயர படுக்கையினை தயார் செய்ய வேண்டும். இந்த படுக்கையின் நீள அகலம் பண்ணைக் கழிவுகளில் கிடைப்பதை பொருத்து அமைத்துக் கொள்ளலாம். இந்த படுக்கைகள் நடுவில் உயர்ந்தும் பக்கவாட்டில் சரிவாக இருக்குமாறும், (வடிகால் வசதியை ஏற்படுத்துவதற்காக) கூடுமானவரை நிழலில் இருக்குமாறும்அமைத்துக்கொள்ள வேண்டும். மண்புழுக்கள் வெளிச்சத்தை விரும்புவதில்லை. அதனால் படுக்கைகளை மூடி வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறது.மேலும் இருளானது மக்கும் காலத்தைக் குறைக்கிறது.
படுக்கையின் மூதல் அடிக்கில் லேசான பொருட்களான கோதுமை/சோயபீன் தோலினை அடுக்கவும். பின் சாண கரைசலை லேசாக தெளிக்கவும்.
ஒரு கிலோ மண்புழுக்களை 10 மீட்டர் நீளம் 2 மீட்டர் அகலம் உள்ள படுக்கையில் விடவும். இதற்கு மண்புழு முட்டைகள் அல்லமு மண்புழு உரத்தில் உள்ள கரிய மண்புழுக்களையே உபயோகப்படுத்தலாம். களைகள், நறுக்கிய இலை, தழைகள், பண்ணைக் கழிவுகள், வீட்டுக்கழிவுகள்ி மற்றும் மற்ற மக்க சுடிய பொருட்கள் அனைத்தையும் இந்த படுக்கையின் மீது போட்டுக் கொள்ளவும். இந்த படுக்கையை லேசான ஈரப்பதம் இருக்குமாறு அடிக்கடி நீரை தெளித்து வர வேண்டும். ஆனால் நனைந்து விடக் கூடாது. இதற்கு உகந்த ஈரப்பதம் மற்றும் வெப்பநிலை (27-330செ) மக்க எடுத்துக் கொள்ளும் காலம் 40-50 நாட்கள். மண்புழுவின் எச்சத்தில் தோராயமாக 1.2-1.4% மணிச்சத்துக்களும் அடங்கியுள்ளன. இந்த சத்தக்கள் படுக்கை மற்றும் மக்க வைக்கப்படும் பொருட்களை பொருத்து மாறுபடும். மண்புழுவின் எச்சத்தில் அது எடுத்துக்கொள்கின்ற பொருட்களைவிட தழைச்சத்துக்கள் அதிக அளவில் அடங்கியுள்ளது.
ஆ) பருத்தி செடியின் தண்டுகளை டிரைக்கோடெர்மா விரிடியின் மூலம் மக்கச் செய்வது
பருத்தி அறுவடை முடிந்ததும் அதன் தண்டுகள் விறகிற்காக எரிக்கப்படுகின்றன. இந்த தண்டுகளுடன் இதர பயிர்களின் பண்ணைக்கழிவுகள் மற்றும் களைகள் போன்றவற்றை டிரைக்கோடெர்மா விரிடி போன்ற புஞ்சாணங்களைக் கொண்டு சிறப்பான முறையில்  மக்கச் செய்ய முடியும். இந்த தொழில்நுட்பம் சிஜிசிஆர் நாக்பூர் அறிமுகப்படுத்தியது. இதன் விவரம் பின்வருமாறு: 10x2x1 மீட்டர் என்ற அளவில் குழியை தயார் செய்ய வேண்டும். இதில் 2 ஹெக்டர் அளவில் உள்ள காய்ந்த பருத்தி குச்சிகளை நான்கு அடுக்கலாக அடுக்க வேண்டும்.
இந்த தண்டுகளுக்கு இடையே உள்ள இடைவெளியை நிரப்ப லேசான பண்ணை கழிவுகளான சோள தட்டைகள், கொடிகள், சோயாபீன் போன்றவை கொண்டு நிரப்ப வேண்டும். (பருத்தி செடியின் தண்டுகளுக்கு இடையே உள்ள இடைவெளியை நிரப்ப) மற்றும் 50 கிலோ சாணமட (இது ஆரம்ப நிலையில் பூஞ்சாணங்கள் பெருக உதவி புரியும்) ஒவ்வொரு அடுக்கிலும் 60 லிட்டர் தண்ணீரில் 2.5 கிலோ டிரைக்கோடெர்மா விரிடி தூள் மற்றும் அரைக் கிலோ வெல்லம் மற்றும் 15 கிராம் ஈஸ்ட் புவுடரை கலந்து தெளிக்க வேண்டும். இந்த குழியை சணப்பை செடியின் தண்டுகளான கொண்டு மூட வேண்டும். இது நீர் ஆவியாவதை தடுக்க உதவும். குழியில் தேவையான ஈரப்பதம் நிலவ அடிக்கடி தண்ணீரை தெளிக்க வேண்டும். குழியில் உள்ளவை நன்கு மக்கிய பின்னரே குழியை திறக்க வேண்டும்.
இதற்க நான்கு மாக காலம் தேவைப்படும் பிறகு பெரும்பாலான பருத்தி தண்டுகள் மக்கிவிடும். மற்றவை (20%) மட்டுமே கருப்பாக பகுதி மக்கிய நிலையில் காணப்படும். இந்த மக்கிய உரமானது நன்கு மக்கிய மண்புழு உரத்திற்கு சமமானது. இது நுண்ணோட்ட மறுசுழற்சிக்கும்  உதவுகிறது மற்றும் மண்ணில் உள்ள சில நோய் கிருமிகளையும் அழிக்கிறது.
6) களை மேலாண்மை
அங்கக வேளாண்மையில் நிலத்தில் கோரை, அறுகம்புல், ஏறுலை போன்ற நிரந்தரமான களைகளை கட்டுப்படத்தாவிடில் அங்கக வேளாண் முறையில் கட்டுப்படுத்துவது கடினம். இருப்பினும் இத்தகைய களைகளின் வேர்கள், கிழங்குகள் போன்ற மண்ணுக்கு அடியுள்ளவற்றை கோடையில் உழவின் போது வெளிப்படுபவற்றை கையினால் அப்புறப்படுத்த வேண்டும். இதற்கு இயந்திரங்களைக் கொண்டோ அல்லது மனிதர்களைக் கொண்டோ களைகளை அப்புறப்படுத்தலாம். இந்த களைகளை மக்க வைப்பதன் மூலம் மறுசுழற்சி செய்து தொழுவுரமாக பயன்படுத்தமுடியும். ஆனால் இந்த களைகள் நிரந்தரமான களைகள் என்பதால் முழுவதுமாக மக்க வைத்தே பின்பே தொழுவுரமாக பயன்படுத்தப்பட வேண்டும். தட்டைப் பயிறினை இரண்டு வரிசை பருத்திச் செடிகளுக்கு நடுவே வளர்பதன் மூலம் களைகளை கட்டுப்படுத்த முடியும்.
7) சுழற்சி முறையினை தேர்ந்தெடுத்தல்
மண்வளத்தைப் பாதுகாக்கவும் மற்றும் நோய் தாக்குதல் மற்றும் களைகளை கட்டுப்படுத்தவும் பயிர்சுழற்சி முறை அவசியமானதாகும். அதிக சத்துக்களை எடுத்துக்கொள்கின்ற பயிர்களை தவிர்த்து அந்த பகுதிக்கு ஏற்ற பயிர்வகைப் பயிர்களை தவிர்த்து அந்த பகுதிக்கு ஏற்ற பயிர்வகைகளைப் பயன்படுத்தலாம்.
8) பயிர் பாதுகாப்பிற்காக ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு யுக்திகள்
பயிர் பாதுகாப்பு முறைகள் நோய்களின் தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாக்கின்றன. பருத்தியின் அங்கக வேளாண் முறைகளுக்கு உகந்ததான இயற்கையான பாதுகாப்பு முறைகளான பூச்சிகளை உண்டும் பூச்சிகளான சர்சோ பேர்லா அல்லது அபர்ஆடாசர்சா போன்றவைகளின் ஒட்டுண்ணி முட்டைகளான டிரைகோடெர்மா ஒட்டுண்ணி பூச்சிகளான ஹப்ரோபரகோன் அல்லது உயிர்கொல்லி உயிரினங்களான ஹெகவோபா, ஆர்மிகாராஈ என்.வி.பி மற்றும் பாக்டிரியும், போகிலாஸ் கிரிங்யுஞ்சாஸ்வர் குறுஸ்டகி கலவைகள் பறவையினங்களின் உபயோகப்படுத்துவது  மற்றும்  தாவர பூச்சிக் கொல்லிகளான வேம்பு பொருட்கள் ஆகியவற்றை உபயோகப்படுத்தலாம்.
இயற்கை கட்டுப்பாடு முறைகளை உபயோகிக்கும் பொழுது பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்தக்கூடாது. இது பருத்தி உற்பத்தித் திறனை அதிகரிக்கும். இயற்கை கட்டுப்பாட்டு முறைகளை கடைபிடிக்க முதலில் பூச்சிக் கொல்லி மருந்துகளை தெளிப்பதை தவிர்க்க வேண்டும். இலைகள் பூச்சிகளை அழிப்பதோடு மட்டுமின்றி நன்மை செய்யும் உயிரினங்களயும் அழிக்கிறது. மேலும் மனிதர்களுக்கும் ஏற்றதல்ல. கீழ்கண்ட பயிர் நோய் கட்டுப்பாட்டு முறைகள் பருத்தியின் அங்கக வேளாண்மைக்கு பரிந்துரைக்கப்படுகின்றன.
  1. தகுந்த நோய் எதிர்ப்பு இரகங்களை தேர்வு செய்யவும்.
  2. கிரைபேர்லா 500-1000/ஹெக்டர் என்ற அளவில் பூச்சிகளின் பாதிப்புகளின் அளவைப் பொறுத்துவிட வேண்டும். பின்பு 20-25 நாட்களுக்கு ஒருமுறை பயிர் வளர்ச்சிக்கு ஏற்ப விட வேண்டும்.
  3. தண்டினை துளைக்கும் புழுக்களை அழிக்கும். முட்டைகளை கொல்லும் டிரைகோசார்டஸ் @ 5/ஹெக்டர் என்ற அளவில் 40-50 நாள்விட வேண்டும். பின்பு 10-12 நாட்களில் மறுபடியும் விட வேண்டும்.
  4. அமெரிக்கன் தண்டுப் புழு தோன்றும் பொழுது ஹெ-என்.பி.வி ரூ.250 கரைசல் அல்லது எல்இ 200 கோடி (109) போலி இன்குளுசன் பாடிஸ் அல்லது பாலி அக்குளுசன் பாடில் சை தெளிக்கவும். சிறந்த கட்டுப்பாட்டு முறைகள் அமைய அதனை 15 நான் இடைவெளிகளில் தெளிக்கவும். இதை மாற்ற பயிர்களுக்கும் மாற்று கட்டுப்பாட்டு முறையாக ரூ. 1.51/ ஹெக்டர் என்ற அளவில் தெளிக்கலாம்.
  5. பூக்கள் மற்றும் இலைகள் மற்றும் தண்டுகளை தாக்கும் புழுக்கழள அழிக்க ஹெப்புரோரொகான் ஹெபிடோடர்யை விட வேண்டும். இவைகளால் சிறந்த கட்டுபாட்:டு சூழலை ஏற்படுத்த முடியும்.
  6. ஒரு ஹெக்டரில் 3-6 பறவைகள் அமரும் மர கொம்புகளை நட்டுவைப்பதன் மூலம் பறவைகளின் வரவு அதிகரித்து பூச்சிகளின் தாக்குதல் குறையும்.
  7. வேம்பு சார்ந்த தாவர பூச்சிக் கொல்லிகள், கொட்டை சாறு 5% லி/லி அல்லது எண்ணெய் 1% தெளிப்பது பயிரை தாக்கும் பூச்சிகளை சிறப்பாக கட்டுப்படுத்தும்.
  8. பூச்சிகளின் நடமாட்டத்தை கவனிப்பதால் கவர்ந்து இழுக்கும் பொறிகளைக் கொண்டு காய்ப்புழுக்களை கவர்ந்து அழிக்க முடியும்.
  9. மற்றொரு முக்கியமான நடைமுறை தொழில்நுட்பமான பருத்தி பயிரினை 30 நாட்கள் தாண்டிய பின்னரும் வளர்ப்பது காய்புழுக்களின் முட்டைகளின் எண்ணிக்கையைக் குறைக்கும்.

களையை கட்டுப்படுத்த நிழற்போர்வை

தர்மபுரி மாவட்டத்தில், நிலங்களில் களையை கட்டுப்படுத்த, விவசாயிகள் நிழற்போர்வை அமைக்க, ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில் நெல், கரும்பு, தக்காளி, மா, கரும்பு, துவரை, பருத்தி, மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும், காய்கறி பயிர்கள் மற்றும் மலர் சாகுபடி முக்கிய பங்கு வகித்து வருகிறது.பட்டன் ரோஸ், சாமந்தி, சம்மங்கி, கோழிக்கொண்டை, மல்லிகை, முல்லை உள்ளிட்ட மலர்கள் குறிப்பிட்ட பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
மலர் சாகுபடி மூலம் விவசாயிகளுக்கு போதிய வருவாய் கிடைத்து வந்த போதிலும், களை எடுத்தல், பூச்சி கொல்லி மருந்து உள்ளிட்டவைகளுக்கு, அதிக செலவு செய்யும் நிலை ஏற்பட்டு வருகிறது.இதை தடுக்க, பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள், பசுமை குடில் மூலம், மலர் செடிகளை வளர்த்து வருகின்றனர்.
பல விவசாயிகள், களை மற்றும் நிலங்களில் இருந்து, தண்ணீர் அதிகளவு உறிஞ்சப்படுவதை தடுக்க, விவசாய நிலங்களில், நிழற் போர்வை அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து ஆலிவாயன்கொட்டாயை சேர்ந்த விவசாயி வேடியப்பன் கூறியதாவது:
  • தர்மபுரி மாவட்டத்தில், சில ஆண்டுகளாக, பருவ மழை பொய்த்ததால், விவசாய கிணறுகளில் நீர் மட்டம் குறைந்தது. இதனால், விவசாயிகள் கிணறுகளை ஆழப்படுத்தி வருகின்றனர்.
  • சில விவசாயிகள், குறைந்த தண்ணீரில், விவசாய பயிர்களை சாகுபடி செய்ய, சொட்டு நீர் பாசனம் அமைத்து வருகின்றனர்.
  • பட்டன் ரோஸ் உட்பட பல்வேறு மலர்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள், தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க, மலர் செடிகளுக்கு, தென்னை நார் கொட்டியும், அதன் மீது பாலிதீன் கவர் மூலம் நிழற் போர்வை அமைத்து வருகின்றனர்.
  • விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறையுள்ள நிலையில், நிழற்போர்வை அமைப்பதன் மூலம், களைகளை கட்டுபடுத்த முடிகிறது.
  • ஒரு ஏக்கர் பட்டன் ரோஸ் செடிகளுக்கு நிழற் போர்வை அமைக்க, 10 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. தோட்டக்கலைத்துறையினர், நிழற் போர்வை அமைக்க தேவையான, பாலிதீன் கவர்களை, விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர்.
  • இதற்கு காலதாமதம் ஏற்பட்டு வருவதால், பெரும்பாலன விவசாயிகள், இலவசமாக பாலிதீன் கவர்களை வாங்க முடியாத நிலை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Saturday, 28 January 2017

மணக்கும் மல்லிகை மயக்கும் வருமானம்

கரும்பு பயிரிட்ட இடத்தில் தற்போது மல்லிகை தான் வருமானம் தந்து காக்கிறது, என்கிறார் மதுரை சத்திரப்பட்டி மஞ்சம்பட்டியைச் சேர்ந்த மல்லிகை விவசாயி ரெங்கநாதன்.
பி.எஸ்சி., இயற்பியல் படித்த இவர், மணக்கும் மல்லிகையின் மயக்கும் வருமானம் குறித்து அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
15 ஆண்டுகளுக்கு முன் வரை, நெல், கரும்பு சாகுபடி தான் செய்து வந்தேன். மனைவி ராதாவின் திருச்சி வீட்டில் மல்லிகை சாகுபடி செய்த அனுபவத்தை கூறினார். முதலில் 50 சென்ட் இடத்தில், ராமேஸ்வரத்தில் இருந்து 3000 பதியன்களை வாங்கி வந்து நட்டேன். ஆறு மாதத்தில் பூக்க ஆரம்பித்தது. உரம், களை நிர்வாகம் செலவு பிடித்தது. ஆறுமாதம் கழித்து 10 கிலோ பூத்தது. ஓராண்டில் 20 கிலோ பூத்தது.
கரும்பு நட்ட ஐந்து ஏக்கரையும் மல்லிகையாக மாற்றினேன். வெவ்வேறு நேரங்களில் பதியன் செய்ததால் தினமும் 100 – 200 கிலோ பூ வரத்து கிடைக்கிறது. தோட்டக்கலை உதவி இயக்குனர் காமராஜ், சொட்டுநீர் பாசனத்தை பற்றி சொன்னபோது, நூறு சதவீத மானியத்தில் ஒரு ஏக்கருக்கு சொட்டுநீர் பாசனம் அமைத்தேன். இன்னும் இரண்டு ஏக்கரில் சொட்டுநீர் பாசனம் அமைக்க உள்ளேன். நெல், கரும்பில் ஒருமடங்கு லாபம் என்றால் மல்லிகையில் மூன்று மடங்கு லாபம் கிடைக்கிறது.
மல்லிகையில் நஷ்டம் என்று யாராவது சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டேன். செடிகளுக்கு தேவைப்படும் உரம், தண்ணீரை கொடுத்து கொண்டே இருப்பேன். இங்கே பெரியாறு பாசனம் என்பதோடு கால்வாய் என் தோட்டம் வழியாக தான் செல்கிறது. மல்லிகைக்கு அதிக தண்ணீர் தேவையில்லை. எனவே சிமென்ட் வாய்க்கால் அமைத்து, தண்ணீர் தோட்டத்திற்குள் வராமல் பார்த்துக் கொண்டேன். ஆரம்பத்தில் வாரத்திற்கு ஒருமுறையும், தற்போது 15 நாட்களுக்கு ஒருமுறையும் தண்ணீர் விடுகிறேன். நவ, டிசம்பரில் கவாத்து எடுத்து எடுக்க வேண்டும். தரையில் படர்ந்து வளரும் நீர்போர்த்து கிளைகளை வெட்டிவிட வேண்டும். பூக்காமல் மேல்நோக்கி வளரும் செடிகளை கிள்ளிவிட வேண்டும். முறையாக பராமரித்தால் 15 ஆண்டுகள் வரை இப்பயிரில் இருந்து வருமானம் பார்க்கலாம்.
உற்பத்திக்காக கோவையில் ஹார்ட்டி இன்டெக்ஸ் அமைப்பின் தேசிய விருது கிடைத்தது பெருமைக்குரிய விஷயம் என்றார்

இஞ்சி வளர்ப்பு – இயற்கை வேளாண்மையில் இஞ்சி சாகுபடி

இஞ்சி சாகுபடியில் நிலத்தின் வளம்/நலம் பேணுவது மிக முக்கிய செயலாகும். நிலத்தில் அங்ககப் பொருட்களின் அளவு கூடுதலாக இருப்பதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட வேண்டும். குறிப்பாக கால்நடைக் கழிவுகளான தொழுஉரம் அல்லது ஆட்டுக்குப்பை அல்லது நன்கு தயாரிக்கப்பட்ட கம்போஸ்ட் அல்லது மண்புழு உரம் நிலத்தில் கடைசி உழுவில் இட வேண்டும். கம்போஸ்ட் அல்லது தொழு உரமாக இருப்பின் ஏக்கர் ஒன்றுக்கு 15 முதல் 20 டன் பயன்படுத்த வேண்டும். அது மட்டுமின்றி இஞ்சி சாகுபடி துவங்குவதற்கு முன்பு 60 முதல் 70 நாட்களுக்கு முன்னர் பலவகை விதைகள் ஏக்கர் ஒன்றுக்கு 30 கிலோ விதைத்து 4 முதல் 5 அடி உயரம் நன்கு வளர்ந்த பயிர்களை மடித்து உழவு செய்வதன் மூலம் 25 முதல் 30 டன் தாவரக் கழிவு சேர்ப்பது நிலத்தின் பெளதிக தன்மை/இயற்பியல் தன்மை மிக சிறப்பாக உருவாகி விடும். ஆக அங்கக் பொருட்களின் அளவு எந்த அளவு கூடுதலாக இருக்கின்றதோ அந்த அளவிற்கு நிலத்தின் உயிர் இயக்கம் அதாவது நுண் உயிர்களின் இயக்கமும் அதிகரிக்கும். அங்ககப் பொருட்களின் அளவு கூடுவது நில வளம் எனவும், நுண்உயிர்களின் இயக்கம் அதிகரிப்பது நில நலம் பேணுதல் எனவும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆக நிலவளம், நில நலம் ஆகிய இரண்டும் மிக முக்கிய ஆதார செயல்கள் ஆகும். இது அனைத்து வகை சாகுபடி பயிர்களுக்கும் பொருந்தும்.

குறிப்பாக இஞ்சி சாகுபடியில் அதன் தரமான விளைச்சலுக்கும் அதில் உள்ள மருத்துவ குணங்களின் அளவு மிகவும் கூடுதலாகவும் இருக்கும். இதற்கு ஆதாரமாக இருப்பது நிலவளமும், நில நலமும் ஆகும். பலவகை விதைகள் என்பது அந்த அந்த பகுதிகளில் எளிதாக கிடைக்கக் கூடிய தானிய வகை, பயறு வகை, எண்ணைவித்துக்கள் மற்றும் தழைச்சத்து கொடுக்கும் வகைகளின் விதைகள் சேகரித்து விதைப்பதற்கு பயன்படுத்த வேண்டும். ஆக இவை அனைத்தும் கலந்த விதைகள் ஏக்கர் ஒன்றுக்கு 25 கிலோ முதல் 30 கிலோ அளவு பயன்படுத்தலாம்.
பலவகை விதைகள் விதைத்து 30 முதல் 35 நாட்களில் நன்கு அடர்த்தியாக வளர்ந்த நிலையில் நுண் உயிர் கலவை உரம் தயாரித்து பயன்படுத்துவது மிக அவசியமாகும். நன்கு மக்கிய கம்போஸ்ட் அல்லது தொழுஉரம் அல்லது மண்புழு உரம் 70 கிலோ, மரத்தூள் 20 கிலோ, சாம்பல் 10கிலோ ஆக 100 கிலோ தயாரிக்கவும். இதில் அசோஸ்பைரிலம் 1 கிலோ, ரைசோபியம் 1 கிலோ, பாஸ்போ பாக்டீரியா 1 கிலோ, பொட்டாஷ் பாக்டீரியா 2 கிலோ, வேம் 10 கிலோ, சூடோமோனஸ் 1 கிலோ, வீ.விரிடி 1 கிலோ, வீ.ஹார்சியானம் 1 கிலோ, பேசிலஸ் சப்டிலஸ் 1 கிலோ, பேசிலோ மைசிஸ் 1 கிலோ ஆகியவை மேற்படி கலவை மீது தூவி நன்கு பிரட்டி கலவை தயாரிக்கவும், இந்த கலவையின் மேல் தொல்லுயிர் கரைசல் 10 லிட்டர், அமுத கரைசல் 6 லிட்டர், பஞ்சகவ்யா 7 லிட்டர், மோர் கரைசல் 7 லிட்டர், சினி2=1 லிட்டர், ஹியூமிக் அமிலம் 1 லிட்டர் ஆகியவை கலந்து கரைசல் தயாரித்து மேற்படி நுண்உயிர் கலவை உரத்தின் மீது தெளித்து நன்கு பிரட்டி கலவை தயாரித்து நிலத்தில் தூவி வாய்க்கால் பாசனம்/சொட்டுநீர்/தெளிப்பு நீர் பாசனம் செய்ய வேண்டும். அடுத்த 30 நாட்களில் பலவகை பயிர்கள் நன்கு வளர்ந்து வருவதற்கும், நுண்உயிர்கள் மிகுந்த அளவில் பெருக்கம் அடையவும் ஏற்ற சூழல் உருவாகிறது. இதனை நில நலம் பேணுதல் எனலாம்.
பலவகை பயிர்கள் 60 நாட்களில் நன்கு வளர்ந்த நிலையில், டிராக்டர் ரோட்டவேட்டர் பயன்படுத்தி மடிந்து உழவு செய்தால் ஏக்கர் ஒன்றுக்கு 25 டன் தாவரக் கழிவு சேர்க்கப்படுகிறது. இதனை நில வளம் பேணுதல் எனலாம்.
பின்னர் 15 செ.மீ உயரம் ஒரு மீட்டர் அகலம் மற்றும் தேவையான அளவு நீளமுள்ள மேட்டுப் பாத்திகளை அமைக்க வேண்டும். மேட்டுப் பாத்திகள் ஒவ்வொன்றிற்கும் இடையில் 40 செ.மீ அடைவெளிவிட்டு அமைக்கவும். விதை இஞ்சி சுமார் 25 முதல் 50 செ.மீ நீளமும், 20 முதல் 25 கிராம் எடையுள்ளதாகவும், அதில் ஒன்று அல்லது இரண்டு முளைப்பு பருக்கள் கொண்ட இஞ்சித் துண்டுகளை வெட்டி எடுத்து விதைப்பதற்கு பயன்படுத்த வேண்டும்.
ஒரு ஏக்கருக்கு 600 முதல் 750 கிலோ விதை இஞ்சி தேவைப்படும். விதைத் துண்டுகளை 100 லிட்டர் தண்ணீரில் 5 லிட்டர் மோர்கரைசல், 10 லிட்டர் தொல்லுயிர்கரைசல், சூடோமோனஸ் 1 கிலோ அல்லது 500 மிலி கலந்து 30 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் நடவிற்கு பயன்படுத்த வேண்டும். இது பூசணநோய் கட்டுப்படுத்தும். மற்றும் வெர்ட்டி சீலியம் லெகானி 1 கிலோ மெட்டாரைசன் 1 கிலோ மேற்படி கரைசலில் கலந்து பயன்படுத்துவதன் மூலம் சாறு உறிஞ்சும் பூச்சிகள், செதில் பூச்சிகள் தாக்குதலிலிருந்து பாதுகாக்கலாம். பின்னர் மேட்டுப் பாத்திகளில் இஞ்சி துண்டுகளை நடவு செய்ய வேண்டும். இறவை சாகுபடியில் வரிசைக்கு வரிசை 40 செ.மீ இடைவெளியும் ஒவ்வொரு வரிசையிலும் 20 முதல் 25 செ.மீ இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.
பயிர் பராமரிப்பு
நடவு செய்து 30 முதல் 40 நாட்களில் பாசன நீரில் பயன்படுத்த ஏக்கர் ஒன்றுக்கு அசோஸ்பைரிலம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ் பேக்டீரியா, சூடோமோனஸ், வீ.விரிடி, வீ.ஹார்சியானம், பேசிலஸ் சப்டிலஸ், பேசிலோமைசிஸ் ஆகியவை ஒவ்வொன்றிலும் ஒரு கிலோ வீதமும், தொல்லுயிர் கரைசல் 100 லிட்டர், அமுத கரைசல் 10 முதல் 20 லிட்டர் பஞ்சகவ்யா 3 முதல் 10 லிட்டர், மோர் கரைசல் 3 முதல் 10 லிட்டர், EM2 1 முதல் 3 லிட்டர், ஹியூமிக் அமிலம் 1 முதல் 3 லிட்டர் ஆகியவைகளைக் கலந்து ஒரு நாள் வைத்திருந்து அடுத்த நாள் பாசனத்தில் பயனபடுத்த வேண்டும். இதற்கு நிலவள ஊக்கி எனப்படும். மாதம் ஒரு முறை வீதம் 6 முறை பயிர்வளர்ச்சியின் தேவைக்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும்.
அல்லது துவக்கத்தில் விளக்கியுள்ளபடி நுண்உயிர் கலவை உரம் தயாரித்து பயன்படுத்தலாம். மாதம் ஒரு முறை வீதம் 6 முறை பயிரின் வளர்ச்சி தேவைக்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும். வேம் 1 கிலோ பயன்படுத்தவும். இஞ்சி சாகுபடியில் மேட்டுப் பாத்தியில் மூடாக்கிடுதல் மிகமிக அவசியமாகும். இஞ்சித் துண்டுகளை விதைக்கும் தருணத்தில் ஏக்கர் ஒன்றுக்கு 5 முதல் 6 டன் இலை, தழைகளை மேட்டுப் பாத்தியின் மீது பரப்புதல் அவசியம். இவ்வாறு பரப்பிய தழைகள் மட்கி முடியும் தருணம் மேலும் 45 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை மூடாக்கு செய்தல் மிக அவசியமாகும்.
நுண் உயிர்கலவை உரம் பயன்படுத்தும் போது சருவுமூடாக்கை விலக்கி நுண்உயிர்கலவை உரம் இட்டு மீண்டும் அதனை மூடுவது மிக அவசியமாகும். மூடாக்கு பயன்படுத்துவதால் மேட்டுப் பாத்தியில் சூரிய ஒளி நேரடியாகபடுவது தவிர்க்கப்படும். மண்ணில் ஈரப்பதம் பாதுகாக்கப்படுகிறது.
மழைக்காலங்களில் நிலவள ஊக்கி பயன்படுத்த இயலாது. நுண்உயிர்கலவை உரம் பயன்படுத்துவது சாலச் சிறந்தது. மழை மிக அதிகமாக பெய்யும் சந்தர்ப்பங்களில் நுண்உயிர்கலவை உரம் 15 நாட்கள் இடைவெளியிலும் பயன்படுத்த வேண்டும். உயிர்ம இடு பொருட்களின் அளவையும் கூடுதலாக பயன்படுத்த வேண்டும்.
பொதுவாக இஞ்சி சாகுபடியில் பரவலாக தெளிப்பு நீர் பாசனம் பயன்படுத்தப்படுகிறது. நிலவள ஊக்கியை இதனுடன் கலந்து தெளிப்பது மிக நல்ல பலன் அளிக்கும். இம்முறையில் மாதம் ஒரு முறை பயன்படுத்த கொடுத்துள்ள நிலவள ஊக்கியை 15 நாட்களுக்கு ஒரு முறை சரிபாதி அளவாக பயன்படுத்தலாம். இவ்வாறு பயன்படுத்துவது மூலம் இஞ்சி பயிரைத் தாக்கும் சாறு உறிஞ்சு பூச்சிகள், இலை தண்டுகளை சேதம் செய்யும் புழுக்கள் மற்றும் பூசண நோய்கள் கட்டுப்படும்.
பயிர் பாதுகாப்பு
செதிள் பூச்சி, இலை சுருட்டுப்புழு, தண்டு துளைப்பான் போன்றவற்றைக் கட்டுப்படுத்த பாசியாளா, மெட்டாரைசன் பயன்படுத்த வேண்டும். பூசண நோய் தாக்குதல் கட்டுப்படுத்த சூடோமோனஸ் பயன்படுத்த வேண்டும்.
100 லிட்டர் கரைசல் தயாரிக்க
  1. தொல்லுயிரி கரைசல் – 10 லிட்டர்
  2. அமுதகரைசல் – 10 லிட்டர் (அல்லது) பஞ்சகவ்யா 3 முதல் 5 லிட்டர்
  3. மோர் கரைசல் – 3 முதல் 5 லிட்டர் + EM2 1 லிட்டர்
  4. பூச்சி விரட்டி கரைசல் – 5 முதல் 10 லிட்டர்
  5. பாசியானா – 2 முதல் 3 கிலோ அல்லது 350 மில்லி – 500 மில்லி
  6. மீதம் நீர் சேர்த்து 100 லிட்டர் கலவை தயாரித்து பயன்படுத்த வேண்டும்.
குறிப்பு
பயிருக்கு தெளிப்பு செய்வதற்கு முந்நாள் , தொல்லுயிர் கரைசலில் பாசியாளாவும் அமுத கரைசலில் மெட்டாரைசமும் மோர் கரைசலில் சூடோமோனஸ் கலந்து வைக்கவும். அடுத்த நாள் தெளிக்கும் போது மேற்படி கரைசல்களை வடித்து பயன்படுத்தலாம். கரைசலின்அடிப்பகுதியில் கீழ்ப்படிவாக தங்கியுள்ள அடர்கரைசலை மக்கிய குப்பையில் கலந்து நுண் உயிர்கலவை உரம் தயாரிக்கும்பொழுது இதனையும் சேர்த்து கலந்து பயன்படுத்தலாம்.
தெளிப்பிற்கு மற்றொருமுறை
ஒவ்வொருமுறையும் மேற்படி குறிப்பிட்டுள்ள வகையில் தெளிப்பதில் உயிர்மவெளி இடுபொருட்கள் (Bio Products) விலைக்கு வாங்கி பயன்படுத்தினால் இடுபொருள் செலவு கூடிவிடும். இந்த செலவை குறைக்க கீழே விவரிக்கப்பட்டுள்ள முறையில் கரைசல் தயாரிக்கவும்.
வேப்ப எண்ணெய் கரைசல் தயாரித்தல்
  1. வேப்ப எண்ணை – 1 லிட்டர் திரவ வடிவ சோப்பு கலவை – 200 மி.லி வேப்ப எண்ணெயில், திரவ வடிவ சோப்பு கலவை சேர்த்து குச்சியால் நன்கு கலக்கவும். கரைசல் பழுப்பு நிறமாக மாறும். வேப்ப எண்ணை நீரில் கரையக் கூடியதாக மாறும்.
  2. புங்கன் எண்ணை கரைசல் புங்கன் எண்ணை – 1 லிட்டர் திரவ வடிவ சோப்பு கலரை – 200 மி.லி
மேற்குறிப்பிட்ட முறையில் நன்கு கலக்கினால் புங்கன் எண்ணை நீரில் கரையக்கூடியதாக மாறும்.
தெளிப்பதற்கு 100 லிட்டர் கரைசல் தயாரித்தல்
  1. வேப்ப எண்ணை கரைசல் – 350 மி.லி
  2. புங்கன் எண்ணை கரைசல் – 350 மி.லி
  3. தொல்லுயிர் கரைசல் – 10 லிட்டர்
  4. பூச்சி விரட்டி கரைசல் – 5 முதல் 10 லிட்டர்
  5. மீதம் நீர் சேர்த்து 100 லிட்டர் கலவை தயாரித்து பயன்படுத்த வேண்டும்.
    பயிர் பாதுகாப்பில் தெளிப்பதற்கு துவங்கும் நேரம் முதலில் உயிர்ம இடுபொருட்கள் பயன்படுத்தும் கலவை பக்கம் 6ல் உள்ள படி தயாரித்து தெளிக்கவும். பின்னர் அடுத்தமுறை வேப்ப/புங்கன் எண்ணை மேலே விவரித்துள்ள முறையில் தயாரித்து தெளிக்கவும். மேற்படி முறையில் மாற்றி மாற்றி தெளிப்பதன் மூலம் பூச்சி நோய் கட்டுப்படும் சிலவும் குறையும்.
    பூச்சி நோய் தாக்குதல் வருமுன் காப்பாக தெளிப்பு செய்யும் போது வெளி இடுபொருட்களை குறைந்த அளவிலும், தாக்குதல் அதிகமாக இருக்கும் பாதகமான சூழலில் வெளி இடுபொருட்களை அதிக அளவிலும் பயன்படுத்த வேண்டும்.
    இஞ்சி சாகுபடியில், பாதகமான சூழலில் மெது அழுகல் நோய் தாக்குதல் மிக அதிகமாக இருக்கும் நேரங்களில் நுண்உயிர்கலவை உரம் தயாரித்து அதில் பயன்படுத்தப்படும் உயிர்ம இடுபொருட்களின் அளவுகளை இரட்டிப்பாக்கி பயன்படுத்த வேண்டும்.
    மெதுஅழுகல்நோய் தாக்குதல் துவங்கிய பகுதிகளில் உள்ள பயிர்களுக்கு நுண்உயிர்கலவை உரத்தை வாரம் ஒருமுறை வீதம் 3 முறைகள் பயன்படுத்த வேண்டும். நோய் தாக்கிய பயிர் அருகில் 12 செ.மீ குழி செய்து அதில் நுண் உயிர் கலவை உரம் இட்டு மண்ணால் மூடி விட வேண்டும். அதன் மேல் சருவு மூடாக்கும் பரப்ப வேண்டம். இவ்வாறு செய்வதன் மூலம் மெது அழுகல் நோய் மற்ற பயிர்களுக்கு பரவாமல் கட்டுப்படுத்த இயலும். அதாவது “நுண் உயிர் கோட்டை சுவர்” பாதிக்கப்பட்ட பகுதி சுற்றிலும் அமைக்கப்படுகிறது. இது இயற்கை வேளாண்முறையில் மட்டும் தான் சாத்தியமாகும்.
    அறுவடை
    இஞ்சியை அறுவடை செய்த பின்னர் பச்சையாக விற்பதனால் இஞ்சி விதைத்து 6ஆம் மாதம் முதல் அறுவடை செய்ய துவங்க வேண்டும். நன்கு காய்ந்த இஞ்சி தயாரித்து விற்பனை செய்ய இருப்பின் இஞ்சி விதைத்த 245-250 நாட்களில் அறுவடை செய்யலாம். பச்சை இஞ்சியாக விற்பனை செய்ய இஞ்சி அறுவடை செய்த உடன் அவைகளை நீரில் நன்கு கழுவி மண் மற்ற அழுக்குகளை நீக்கி சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் வெய்யிலில் ஒரு நாள் முழுமையாக உலர்த்தி இஞ்சியின் மேல் ஈரப்பதம் உலர்ந்த பின்னர் விற்பனை செய்ய வேண்டும். காய்ந்த இஞ்சி அறுவடை செய்ய அதன் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி காய துவங்கும். இந்த நிலையில் அறுவடை செய்யவும்.

பார்த்தீனியத்தை பற்றி மேலும் கொஞ்சம்

பல தென்னந்தோப்புகளில் விவசாயிகள் பார்த்தீனியத்தை ஒரு எதிரியாக பாவித்து அதனை கங்கணம் கட்டிக்கொண்டு அழித்திட அதிக காசு செலவு செய்து களைக்கொல்லி மருந்து தெளித்து கடும் நஷ்டத்துக்கு ஏன் மண்ணின் உயிர்க்குலங்கள் நாசமாகி மலடாகி தென்னந்தோப்பே வறண்ட காடு போலக்காட்சியளித்திடச் செய்கிறார்கள். இறைவன் தந்த வரங்கள் தான் தாவரங்கள். அதில் தானாக வளரத் திறன் கொண்ட தாவரமான பார்த்தீனியம் நம்மால் தான் நிலத்துக்கு கொண்டு வரப்பட்டது என்பது விசித்திரமான உண்மையாகும்.
அரை அடி முதல் 3 அடி வரை மண் கண்டத்துள்ளே அங்கிங்கெணாதபடி களை விதைகள் பல்கி பரவிக் கிடப்பதே அரைகுறையான மட்காத குப்பை உரத்தை இடுவதால் தான். ஆம், கால்நடை உண்ட களைச்செடி விதைகள் சாணத்துடன் வெளியே வந்து பத்திரமாக மேற்பரப்பில் பதப்படுத்தப்பட்டு பிறகு எடுத்து வீசும்போது நீரைக்கண்டதும் குப்பென்று வளர்ந்து விடுகிறது. எனவே களைகள் வரும் இந்த வழியை மாற்றி யோசித்து மண்புழு உரமாக இட்டால் நிச்சயம் களைக்கு வேலையில்லை.
அப்படியே களைகள் வந்தாலும் அதனை முறையாக சேகரம் செய்து மட்கம் செய்து மகத்தான உரமாக மீளப்பயன்படுத்தலாம். இதற்கு எந்தக் களையானாலும் விதிவிலக்கல்ல. நல்ல இலைப்பரப்பு அதிகம் கொண்ட பசுந்தழைகள் அடங்கிய பலவித மரங்களின் இலைகளையும் சேகரம் செய்து பார்த்தீனியம் மற்றும் இதர புல்வகைச் களைகளையும் களை நீக்கும் கருவிகள் கொண்டு அறுத்து வதங்க வைத்து அப்புறப்படுத்தி பதப்படுத்தி மண்புழு உரக்குழியில் இட்டு மண்புழு உரமாக மாற்றலாம். அல்லது இதற்கு கம்போஸ்ட் குழி தயாரித்திட எல்லா இடத்திலும் வாய்ப்புள்ளது. நீளம் 15 அடி அகலம் 8 அடி மற்றும் ஆழம் 3 அடி உள்ள குழிகள் தோண்டினால் ஒரு ஏக்கருக்குத் தேவையான உரம் பெற வாய்ப்புள்ளது.
திடல்கள், சேமிப்பு கூடங்கள் மற்றும் நடைபாதைகள், கல்வி சாலைகள், பூங்காக்கள் பேருந்து நிறுத்தங்கள் இங்கு வளர்ந்துள்ள பார்த்தீனியத்தை 10 லிட்டர் தண்ணீரில் 1.5 கிலோ சாப்பாட்டு உப்பு கரைத்து தெளித்து சுத்தமாக அழிக்கலாம். உயிரியல் முறைப்படி “சைக்கோகிரம்மர்’ எனும் புள்ளி உடைய ஈச்சங்காய் போன்ற மஞ்சள் வண்ண வண்டுகளை சேகரம் செய்து பார்த்தீனியம் உள்ள இடத்தில் மெதுவாக அவற்றை சுத்தமாக அழிக்கலாம்.
களை வரும் முன்பே முந்தி ஊடுபயிர், மூடு பயிர், வரப்பு பயிர் மற்றும் நிலப்போர்வை அமைத்தல் மூலம் பார்த்தீனியம் தரும் பாதிப்பை வெகுவாகக் குறைக்கலாம்.

உரமில்லை… மருந்தில்லை… நீரில்லை ஆனாலும் விளையுது நெல்லு

பசிக்க பசிக்க கொடுத்தால் வயிறு கெடாது; வாழ்வும் கெடாது. நெல்லுக்கும் அப்படித் தான். கொடுக்க கொடுக்க தண்ணீரை குடித்துக் கொண்டே இருக்கும். ஆனால் அதையும் அவ்வப்போது காயவிட்டு தண்ணீர் காட்டினாலும் விளைச்சல் கிடைக்கும் என்கிறார் மதுரை மேற்கு ஒன்றியம் குலமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்.
ஐந்தாண்டுகளாக வானத்தை பார்த்து நெல்லைத் தூவி நஷ்டமில்லாமல் விவசாயம் செய்து வரும் அனுபவத்தை விளக்குகிறார்.
“”மாய்ந்து மாய்ந்து தொலி உழவு செய்து, நெல்லு நாற்று உருவாக்கி அதை எடுத்து நிலத்தில் நட்டு ஆட்கூலி கொடுத்து களையெடுத்து மருந்தடிச்சு அறுவடை செய்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுது. நான் ராமநாதபுரத்திற்கு கதிர் அடிக்கும் இயந்திரத்தை கொண்டு செல்வேன். அங்கே மானாவாரியில் நெல் அறுவடையை தெரிந்து கொண்டேன். அதையும் செய்து பார்க்கலாம்னு முடிவு பண்ணினேன்.
விதையை ஊறவைக்கலை. புழுதி உழவு மட்டும் பண்ணி ஏக்கருக்கு 30 விதையை கைவாக்கில் தூவி விட்டேன். மறுபடியும் உழுதப்போ விதையெல்லாம் மெல்ல மண்ணுக்குள்ள மறைஞ்சுருச்சு. அடுத்து எப்ப மழை வருமோ அப்பத்தான் விதை முளைக்கும். சிலநேரம் 20 நாட்கள் கழிச்சு கூட விதை முளைக்கும். இந்த தரம் தூவின ஒரு வாரத்துல மழை வந்துருச்சு. அப்படியே நாற்றாக வளரும். விதைய நேரடியா வயல்ல விதைக்கறதால நாற்று உருவாக்குற அவசியமில்ல. அதுக்கு ஆட்கூலி, அப்புறம் நாற்றை நடுறதுக்கு ஆட்கூலி தேவையில்லை. அதேபோல அடியுரம், தொழுஉரம் எதுவும் போடல. எட்டு கிலோ உயிர் உரம் மட்டும் போட்டேன். யூரியா, பிற உரம் போடாததால செலவு குறைஞ்சுருச்சு. ரசாயன மருந்தடிக்கல. அந்த செலவும் குறைஞ்சது.
கையால தூவுறதால சில இடத்துல அடர்த்தியா நாற்று உருவாகும். அந்த மாதிரி நாற்றை மட்டும் பிடுங்கி எடுத்து இன்னொரு 30 சென்ட் இடத்துல நட்டேன். அது அறுவடைக்கு வர இன்னும் பத்து நாட்களாகும். இந்த முறையில் அக்ஷயா, சீரக சம்பா ரகங்களை சாகுபடி பண்றேன்.
மத்தவங்களோட நிலத்துல உள்ள நெல்லோட ஒப்பிட்டா என்வயல்ல இப்ப அறுவடைக்கு தயாரா நெல்மணிகள் முற்றி நிக்குது. மத்தவங்க நிலத்துல இன்னும் 20 நாளாகும். இங்க பெரியாறு பாசனம் இருந்தாலும் மானாவாரி முறையில மழையை நம்பி தான் விதை விதைச்சேன். மொத்தமே நாலுதரம் தண்ணி பாய்ச்சியிருக்கேன். மத்ததெல்லாம் மழைத்தண்ணி தான். மழையில்லாதப்ப மண்ணோட ஈரத்தை நம்பி வளருது. கைக்கு நட்டமில்லாம ஏக்கருக்கு 35 மூடை கிடைக்குது. விவசாய உதவி இயக்குனர் செல்வன் வந்து சன்னரக நெல்மணிகளை பார்த்துட்டு பாராட்டுனாரு.
ஒருபோக சாகுபடி பண்ற இடத்துல ரெண்டு போக சாகுபடி பண்றேன். இடையில உளுந்து, துவரை ஏதாவது போடுறேன்.
உரம்போட்டு, நாற்று நட்டு, மருந்தடிச்சு 50 மூடை கிடைக்குறதல இருக்கும் லாபம் 35 மூடையில தாராளமா கிடைக்குது. ரசாயனம் கலக்காத அரிசி உருவாக்குறதுல மனசுக்கும் சந்தோஷமா இருக்கு.”

மா – வறண்ட மண்ணில் அசத்தும் அல்போன்சா

விவசாயி வியாபாரியாக மாறினால் இந்த உலகமே திரும்பிப்பார்க்கும் என்பதை நிரூபித்துக்காட்டியுள்ளார் சிவகங்கையை சேர்ந்த விவசாயி முருகேசன். வறண்ட மண்ணான சிவகங்கை எ.கருங்குளத்தை சேர்ந்த இவரது பண்ணை 2,000 ஏக்கர். பண்ணைக் குட்டைகளுடன் தென்னந்தோப்பு என பலவகை மரங்களை வளர்த்து வருகிறார்.வறட்சியில் இந்த கிராமம் தத்தளித்த போது பிழைப்புக்காக வேறு ஊருக்கு புலம் பெயர்ந்த இவர் பல தொழில்கள் செய்தாலும், கடைசியாக தேர்வு செய்தது விவசாயம்.
“அல்போன்சா” மாம்பழம் அதிக விலையில் விற்பதை பார்த்து, தோட்டத்தில் அதை அமைக்கும் விருப்பத்தை விவசாய பல்கலையிடம் கேட்டுள்ளார். இந்த மண்ணில் அது வளராது என கூறியதை கேட்டு, அதையே சவாலாக எடுத்து முதல்கட்டமாக 20 ஏக்கரில் மா சாகுபடியை துவங்கி இன்று பெரும் ஏற்றுமதியாளராகவும் மாறியுள்ள முருகேசன்கூறியதாவது:
  • 25 ஆண்டுகளுக்கு முன்பே எனக்கு இயற்கை உரம் மீது தான் நம்பிக்கை இருந்தது.
  • 15 டன் மண்புழுவை தோட்டத்தில் கொட்டி மண் வளத்தை பெருக்கினேன்.
  • 4 இடங்களில் பண்ணை குட்டைகள் அமைத்து மழைநீரை சேமித்து வந்ததால், நிலத்தடிநீர்மட்டம் பாதுகாக்கப்பட்டது.
  • மகாராஷ்டிராவில் இருந்து மாங்கன்றுகள் வாங்கி ஏக்கருக்கு 40 மற்றும் 66 மரங்கள் வீதம் நடவு செய்தேன்.
  • மூன்று மாதத்திற்கு ஒரு முறை களை எடுப்பதற்காக உழவு செய்து, அந்த களைகளே உரமாக்கினேன்.
  • சொட்டு நீர் பாசனத்தில் அனைத்து மரங்களும் நல்ல பலனை கொடுத்தது.
  • மும்பையில் ஒரு பழம் ரூ.60க்கு விற்பனையானது. அதே பழம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டால் இன்னும் அதிக வருவாய் கிடைக்கும் என மகன் மதிபாலன் அதற்கான முயற்சிகள் எடுத்தார். விவசாயி வியாபாரியாக மாறினால் தான் விவசாயிக்கு உண்மையான பலன் கிடைக்கும், என்பதையும் நிரூபித்தோம்.
  • இந்த பழங்களை பேக்கிங் செய்வதற்கு ஜார்கண்ட் தொழி லாளர்கள் ஈடுபடுகின்றனர். மரத்தில் இருந்து விளைந்த மாங்காயை அதன் காம்போடு 3 அங்குலத்தில் வெட்டி, அதை பெட்டியில் வைக்கோல் சுற்றி வெளியிடங்களுக்கு அனுப்புகிறோம். இதற்கு தனி வரவேற்பு உள்ளது. இன்னும் சில மாதங்களில் இதன் சீசன் களை கட்டும். இந்த ஆண்டு நல்ல வருவாய் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளேன், என்கிறார்.

கோதுமை சாகுபடி

பொதுவாக கோதுமை வட இந்தியாவில் மட்டுமே விளையும் என்ற நிலை மாறி தற்போது தமிழ்நாட்டிலும் ஒரு சில மாவட்டங்களில் குளிர்காலத்தில் கோதுமை விளைவித்து நல்ல மகசூல் கண்டிருக்கிறார்கள். மலைப்பிரதேசங்களில் குளிர்காலத்தில் மட்டுமே கோதுமை சாகுபடி செய்யப்பட்டு வந்த நிலை மாறி தற்போது சமவெளியிலும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக தர்மபுரி, சேலம், வேலூர், திருவண்ணாமலை, கோவை, தேனி மாவட்டங்களில் நவம்பர் 15 வரை கோதுமை விதைப்பிற்கு உகந்த பருவமாக உள்ளது. நவம்பர் 15ம் தேதிக்குள் விதைத்தால் நல்ல மகசூல் கிடைக்கப்பெற்றாலும் பூக்கும் பருவம் உறைபனி இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தென்னந்தோப்பு மற்றும் மாந்தோப்புகளில் அதிக வெளிச்சம் உள்ள வயல்களில் ஊடுபயிராகவும் கோதுமையை பயிர் செய்யலாம். ரகங்கள்: தற்போது கோடபிள்யூ(டபிள்யூ)-1, (எச்டபிள்யூ-3094) மற்றும் எச்டீ 2833 என்ற இரு ரொட்டிக் கோதுமை வகைகள் சமவெளிகளில் சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.
எச்டபிள்யூ 3094: வயது 95-102 நாட்கள், மகசூல்: 20-50குவின்டால்/எக்டருக்கு, பருவம்: நவம்பர்-டிசம்பர்.
எச்டீ 2833: வயது: 95-120 நாட்கள். மகசூல்: 25-50 குவின்டால்.
பருவம்: நவம்பர்-டிசம்பர்.
நிலம் தயாரிப்பு: நல்ல வடிகால் வசதியுள்ள நன்செய் உகந்தது. நன்கு பொலபொலவென்று 2 முறை உழுது கட்டிகள் உடைத்த வயலில் முக்கால் அடி (24 செ.மீ.) இடைவெளியில் 3 செ.மீ. ஆழ கோடுகள் இட்டு கோட்டின் அடிப்பகுதிகளில் இடைவெளியின்றி விதைகளைத் தொடர்ந்து இடவேண்டும். அல்லது பலுக்கு போன்ற கருவியில் 24 செ.மீ. இடைவெளி வருமாறு கோடுகள் இட்டு பின்னர் களைக்கொத்தி உதவியுடன் விதைகளை முழுமையாக மூடி தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஏக்கருக்கு விதைப்பு செய்ய 40 கிலோ விதை போதுமானது.
உரமிடுதல்: ஒரு எக்டருக்கு 100 கிலோ தழைச்சத்து, 60 கிலோ மணிச்சத்து, 40 கிலோ சாம்பல் சத்து தரவல்ல உரங்களை இடவேண்டும். இதில் பாதி அளவு தழைச்சத்து, முழு அளவு மணிச்சத்து மற்றும் சாம்பல்சத்து உரங்களை அடி உரமாக கடைசி உழவில் இடவேண்டும். பாதி தழைச்சத்தினை விதைத்த 30 நாட்கள் கழித்து முதல் களை எடுத்த பின்னர் இட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
நீர்ப்பாசனம்: 5-6 தண்ணீர் போதுமானது. மண்ணின் தன்மை மற்றும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப இது மாறுபடும். விதைத்தவுடன் தண்ணீர் அவசியம். விதைத்த 15 நாட்கள் கழித்து ஒரு பாசனம் தேவை. விதைப்பு: 0-3 நாட்கள். வளர்ச்சி பருவம்-15வது நாள். தூர்வரும் பருவம்-30-35வது நாள். கதிர்விடும் பருவம்: 50-55வது நாள் மற்றும் மணி முற்றும் பருவம்: 70-75வது நாள். இந்த 5 நிலைகளிலும் பாசனம் கட்டாயம் தேவை.
களை நிர்வாகம்: பயிரின் ஆரம்பகாலத்தில் களைகள் இல்லாமல் இருப்பது அவசியம். விதைத்த 20-25வது நாளில் 1 கொத்து களையும், 45-50 மற்றும் 70-75வது நாளில் கைக்களையும் எடுக்க வேண்டும்.
பயிர் பாதுகாப்பு: அவ்வளவாக பூச்சிகள் தாக்குவதில்லை. பூக்கும் தருணம் அசுவினி தாக்குதல் தென்பட்டால் ஊடுருவிப்பாயும் நஞ்சுகளைத் தெளிக்கலாம்.
அறுவடை: நன்கு காய்ந்த தாளை வேரோடு பிடுங்கி அல்லது அறுவடை செய்து நன்கு காயவிட்டு கதிர் அடிக்கும் இயந்திரம் அல்லது கையால் அடித்து மணியைப் பிரிக்கலாம்.
மகசூல்: வளமான சூழ்நிலையில் விளைந்த கோதுமை எக்டருக்கு 4000-5000 கிலோ மகசூல் தரவல்லது. 1 எக்டர் சாகுபடியளவு ரூ.6000/- வரை ஆகும். நிகர வருமானமாக 14,000/- வரை 90 நாளில் கிடைக்கும். எக்டருக்கு 5 டன் கோதுமையும் கிடைக்கும்.

சொட்டுநீர் பாசனத்தில் நீடித்த நவீன கரும்பு சாகுபடி

கரும்பில் இருந்து சர்க்கரை மட்டும் தயாரித்த காலம் கடந்து விட்டது. தற்போது கரும்புச்சாறு கழிவில் மொலாசஸ், சாக்லெட் மற்றும் கரும்பு கையில் இருந்து மின்சாரம், இயற்கை உரம், காகிதம் என கரும்பின் அனைத்து பாகங்களும் பயன்படுகிறது. சமுதாயத்தின் பெரிய பொருளாதார ரீதியாக கரும்பு பயிர் உள்ளது.
“கரும்பு சாகுபடியில் இடுபொருள் மற்றும் நீர்பாசனம் போன்றவற்றை குறைத்து மகசூல் மற்றும் விவசாயிகளின் வருமானத்தை பெருக்கிட “நீடித்த நவீன கரும்பு சாகுபடி’ என்ற புதிய தொழில் நுட்பத்தினை தேசிய வேளாண்மைத்துறை அறிமுகம் செய்துள்ளது.
இதை “நபார்டு’ வங்கி நிதி உதவியில் சர்க்கரை ஆலைகளுடன் இணைந்து தமிழ்நாடு வேளாண் பல்கலையின் “நீர் நுட்ப மையம்’ மூலம் செயல்படுத்தி வருகிறது. இம்முறையில் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே ஏமப்பேர் கிராமத்தில் விவசாயி முத்துக்கவுண்டர் வயலில் “கிரேஸி கரும்பு நாற்று’ பண்ணையில் கரும்பு நாற்றுகள் பெருமளவு உற்பத்தி செய்யப்படுகின்றன.
மேலாளர் கிரேஸி விமலா பாய் கூறியதாவது: நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறையானது கரும்பு சாகுபடியில் ஒரு புதிய அணுகுமுறை மற்றும் நீர் சேமிப்பு வழிகளில் ஒரு புதிய முயற்சி. இந்த முறையில் விளைச்சலை அதிகரிப்பதோடு நீர்நிலை ஆதாரங்கள் முற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கும் உறுதுணையாய் இத்தொழில் நுட்பம் இருக்கிறது. நீடித்த நவீன கரும்பு சாகுபடியானது குறைந்த அளவு தண்ணீரை உபயோகிப்பது சரியான அளவு ஊட்டச்சத்து மற்றும் பயிர் பராமரிப்பின் மூலம் அதிக மகசூல் பெற வழிவகை செய்யும் ஒரு சாகுபடி முறை.
சாதாரணமாக ஒரு ஏக்கரில் கரும்பு நடவு செய்ய வேண்டுமானால் நான்கு டன்கள் கரும்பு தேவைப்படும். இன்றைய கரும்பு விலை டன் ஒன்றுக்கு ரூ.2,250. இதன்படி நான்கு டன்களுக்கு ரூ.10,200 தேவை. ஆனால் நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறையில் கரும்பு நாற்றுகள் நடும்பொழுது ஒரு ஏக்கருக்கு சுமார் 5000 நாற்றுகள் போதுமானது. நாற்று ஒன்றின் விலை ரூ.1.40. இதன்படி 5,000 நாற்றுகளுக்கு ரூ.7,000 போதும். மேலும் 30 நாட்கள் வயதுள்ள நாற்றுகளாக நடுகின்றபடியால் ஒரு மாதத்திற்குண்டான பயிர் பராமரிப்பு செலவு குறைவதோடு கரும்பு வெட்டு மாதமும் ஒரு மாத்திற்கு முன்னரே வருகிறது.
கரும்பினை நேரடியாக அப்படியே வயலில் நடும்பொழுது நடும் அனைத்து பருக்களும் அப்படியே முளைக்கும் என்ற உத்திரவாதம் இல்லை. ஆனால் நாற்றுகளாக நடும் பொழுது அனைத்து நாற்றுகளும் முளைப்புத்திறன் கொண்டதாக உள்ளது. கரும்பு கரணையாக நடுகின்றபொழுது உண்டாகும் கூடுதல் பணியாளர்களை விட நாற்றுகளாக நடும் பொழுது குறைவான பணியாளர்களே போதும். ஒரு ஏக்கருக்குண்டான 5,000 நாற்றுகளை ஆறு நபர்கள் நான்கு மணி நேரத்தில் நடவு செய்து விடலாம். மேலும் பருக்கள் அனைத்தும் முறைப்படி விதை நேர்த்தி செய்து நாற்றுகளாக்கப்படுவதால் கரும்பு பயிரில் நோய் தாக்குதலானது பெருமளவு கட்டுப்படுத்தப்படுகிறது.
நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறையில் கரும்பு நாற்றுகளாக நட்ட வயலில் ஒரு ஏக்கருக்கு கரும்பு மகசூலானது சுமார் 70 டன்கள் வரை கிடைக்கிறது. இதனால் விவசாயிக்கு அதிக லாபம் கிடைப்பதோடு சர்க்கரை ஆலைகளுக்கும் சர்க்கரை கட்டுமானம் அதிகம் கிடைத்து விவசாயிகளுக்கு கரும்புக்கு அதிக விலை கொடுக்க வழிவகை செய்கிறது. நீடித்த நவீன கரும்பு சாகுபடி மூலம் சொட்டு நீர் பாசனம் அமைக்கவும், நாற்றுக்கும் தமிழக அரசின் மானியம் உண்டு. முடிந்த நடவு பருவத்தில் 100 சதவீத மானியத்தில் ஆறு லட்சத்து 25 ஆயிரம் நாற்றுகள் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் அறிவியல் மையத்தின் நீர்நுட்ப மையம் மூலம் விவசாயிகளுக்கு வழங்கியுள்ளோம் என்றார்.

இயற்கை முறையில் காட்டாமணக்கு சாகுபடி

“பயோ டீஸல் முக்கியத்துவம் அதிகரித்து வருவதால், அதை உற்பத்தி செய்ய பயன்படும் காட்டாமணக்கு செடிகளை விவசாயிகள் நடவு செய்ய வேண்டும்” என, வேளாண் உதவி இயக்குனர் பேபிகலா தெரிவித்துள்ளார்.
நம் நாட்டில் உயர்ந்து கொண்டே வரும் பெட்ரோல், டீஸல் விலை காரணமாக மாற்று எரிபொருளாக பயன்படும் பயோ-டீஸலின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. பயோ-டீஸல் காட்டாமணக்கு விதையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. காட்டாமணக்கு விதையிலிருந்து 30 சதவீத திரவ எரிபொருளும், 70 சதவீத புண்ணாக்கும் கிடைக்கிறது. இந்த திரவ எரிபொருளை சுத்தப்படுத்தி டீஸலுக்கு மாற்றாக இயந்திரங்களில் பயன்படுத்தலாம்.
தமிழ்நாடு பல்கலையில் தேர்வு செய்யப்பட்ட “ஜெட்ரோபா கார்கஸ்” என்ற ரகமே உயர் விளைச்சலை தரக்கூடியது. இப்பயிர் சாகுபடி செய்ய ஜூன், ஜூலை மற்றும் செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் ஏற்றவை. இது களர், உவர் இல்லாத அனைத்து மண் வகைகளிலும் வளரக்கூடியது. ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ விதை போதுமானது.
விதைகளை பசுஞ்சாண கரைசலில் 12 மணி நேரம் ஊறவைத்து பின், கோணிப்பையில் 12 மணி நேரம் முடிவைக்க வேண்டும். அவற்றை பாலீதீன் பைகளில் போட்டு, விதைப்பிற்கு பயன்படுத்தலாம். 60 நாட்களில் நாற்றுகள் நடவுக்கு தயாராகிவிடும்.நடவுக்கு முன், சட்டிக்கலப்பையில் ஒரு முறையும், கொத்துக் கலப்பையில் ஒரு முறையும் நன்கு நிலத்தை உழவு செய்ய வேண்டும். பின், 2 க்கு 2 மீட்டர் இடைவெளியில் ஒரு அடி ஆழம்- அகலம், நீளம் என்ற அளவில் குழி எடுக்க வேண்டும். நடவுக்கு முன் ஒரு குழிக்கு மட்கிய எரு இட வேண்டும். அந்தக் குழிகளில் 50 கிராம் தொழு உரம், 100 கிராம் வேப்பம்புண்ணாக்கு கலந்த மண்ணை இட்டு நாற்றுக்களை நட வேண்டும்.
செடிகளை நட்டபின், 3ம் நாள் நீர்பாய்ச்ச வேண்டும். செடிகள் ஒரு மீட்டர் உயரம் வளர்ந்தவுடன் வளரும் நுனியை கிள்ளிவிட வண்டும். பக்கவாட்டில் வரும் கிளைகளின் நுனிகளையும் இரண்டாம் ஆண்டு இறுதிவரை கிள்ளிவிட வேண்டும். 25 பக்க கிளைகள் உள்ளவாறு பார்த்துக் கொள்ளவேண்டும். செடிகள் ஆறு மாதங்களில் பூக்க ஆரம்பித்துவிடும்.
முதல் இரண்டு ஆண்டுகளில் செடிகளில் வரிசையின் இடையே தக்காளி, உளுந்து, பாகல், பூசணி, பரங்கி, வெள்ளரி ஆகியவற்றை ஊடு பயிராக பயிர் செய்யலாம். தரிசாக இருக்கும் நிலங்களிலும் வரப்பு ஓரங்களிலும் காட்டாமணக்கு சாகுபடி செய்து பயன்பெறலாம். காய்கள் முதிர்ந்தவுடன் மஞ்சள் நிறமாகவும், பின் காய்ந்து கருப்பு நிறமாகவும் மாறிவிடும். ஆண்டு முழுவதும் பூக்கும் தன்மை கொண்டதால், காய்களை மாதம் ஒருமுறை அறுவடை செய்யலாம்.பல்லாண்டு காலப்பயிர் 30 ஆண்டுகளுக்கு மகசூல் தரவல்லது. எனவே விவசாயிகள் காட்டாமணக்கு பயிரிட முன்வரவேண்டும்.